உத்தரகாண்டில் சீன ராணுவம் ஊடுருவல் இல்லை

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 26 - சீன ராணுவம் கடந்த சில மாதங்களாக இந்திய எல்லைக்குள் அடிக்கடி ஊடுருவி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் லடாக் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவம் அங்கேயே முகாமிட்டது. ஒரு மாதத்துக்கு பிறகே சீன வீரர்கள் திரும்பி சென்றனர். இதையடுத்து அருணாசல பிரதேச மாநிலத்துக்குள்ளும்  சீன ராணுவ வீரர்கள் ஊடுருவினார்கள். இந்தியா எதிர்ப்பு தெரிவித்தும் சீன படைகள் பின் வாங்கின. இந்த நிலையில் நேற்று முன்தினம் சீன வீரர்கள் திடீரென உத்தரகாண்ட் மாநில எல்லைக்குள் ஊடுருவினார்கள். அங்குள்ள பரகோதி பகுதியில் அவர்கள் முகாம் அமைத்து தங்கினார்கள். 

உத்தரகாண்ட் எல்லைக்குள் வந்த சீன படையில் எத்தனை வீரர்கள் இருந்தனர் என்பது தெரியவில்லை. அவர்களை எப்படி அகற்றுவது என்பது பற்றி இந்திய வீரர்கள் தவித்தனர். இந்த நிலையில் மாலையில் சீன வீரர்கள் பின்வாங்கி சென்றனர். அதன் பிறகே இந்திய ராணுவத்தினர் நிம்மதியடைந்தனர். சீனா அடிக்கடி ஊடுருவுவதால் இந்திய ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை நடக்கும் போதே சீன வீரர்கள் ஊடுருவியதால் அடுத்த என்ன செய்வது என்பது பற்றி மத்திய அரசு தவித்தபடி உள்ளது. இந்த மாதம் மட்டும் சீன படைகள் 3 முறை இந்தியாவுக்குள் ஊடுருவியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: