முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வுடன் செல்பவர்கள் யாராக இருந்தாலும் தோல்வி நிச்சயம்: டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து

திங்கட்கிழமை, 16 மார்ச் 2026      தமிழகம்
tks elangovan

சென்னை, பா.ஜ.க.வுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001-இல் தி.மு.க. தோற்றது. விஜய்க்கும் இதே நிலைதான்” என தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்.23-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. முடிவுகள் மே.4ஆம் தேதி வெளியாக உள்ளன. இதனையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீட்டு பேச்சில் கவனம் செலுத்தி வருகின்றன.

தி.மு.க. தரப்பில் கூட்டணி இறுதியானது. அ.தி.மு.க. தரப்பிலும் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியானலும், விஜய்யை என்.டி.ஏ. கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் த.வெ.க. தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் த.வெ.க., என்.டி.ஏ. கூட்டணிக்கு சென்றால் பாதிப்பு அவர்களுக்குதான் என தி.மு.க. செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். த.வெ.க., என்.டி.ஏ. கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், பா.ஜ.க.வுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001-இல் தி.மு.க. தோற்றது. விஜய்க்கும் இதே நிலைதான்” என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து