முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னணி பாடகர்களுடன் லண்டனில் இளையராஜா இசை

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

லண்டன் ஆக 13  - இளையராஜா இசை நிகழ்ச்சி முதல் தடவையாக லண்டனில் நடக்கிறது. அங்குள்ள ஓ2 அரங்கில் வருகிற 24-ந்தேதி மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பிரபல பின்னணி பாடகர்கள்  எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சின்மயி, கார்த்திக், ஜெயசந்திரன், மது பாலகிருஷ்ணன், சாதனா சர்க்கம், ஸ்வேதாமோகன், யுவன்சங்கர்ராஜா.பவதாரிணி உள்ளிட்ட பலர் பங்கேற்று பாடுகிறார்கள். இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து பாடல்கள் பாடப்படுகின்றன. இளையராஜாவும் பாடுகிறார். நடிகர் கமலஹாசனும் கலந்து கொள்கிறார். இது குறித்து கமலஹாசன் கூறும் போது, விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துள்ளது. இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடக்கின்றன. படப்பிடிப்பில் என் தாடையில் காயம் ஏற்பட்டுள்ளது. நானும் லண்டனில் நடக்கும் இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு வருகிறேன். அதற்கு முன்காயம் ஆறிவிடும் அது என்னவோ தெரியல என்னமாயமோ தெரியல. இளையராஜா இசை என்றாலே காயம் கூட தன்னால ஆறிவிடும் .லண்டனில் இசை நிகழ்ச்சியில் இளையராஜா ரசிகனாக அமர்ந்திருப்பேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்