முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் நியமனம்: சரத்குமார்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை.அக்.1 அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த எஸ்.எஸ்.அமுதன், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாவட்ட அவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக விருகம்பாக்கம் தொகுதிச் செயலாளர் ஏ.பி.எஸ்.பொன்னரசன் நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல் மதுரை மாநகர மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு மதுரை மாநகர மேற்கு மாவட்டத்திற்கு டி.ஜெயக்குமார் மாவட்ட செயலாளராகவும், மதுரை மாநகர கிழக்கு மாவட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவராக இருந்த ஒத்தக்கடை பி.கே.கணேசன் மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony