முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீராராடியா டேப் பதிவுகளை ஆராய 3 மாதம் அவகாசம்

புதன்கிழமை, 9 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, அக்.10 - 2ஙீஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள வர்த்தக இடைத்தரகர் நீராராடியாவின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு பதிவுகளை முழுமையாக ஆராய கோர்ட் நியமித்துள்ள சிறப்பு குழுவுக்கு 3 மாதம் அவகாசத்தை சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது. 

இந்விவகாரம் தொடபாக சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷணின் மக்கள் வழக்காடு மையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் சிங்வி, கோபால் கவுடா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவு;

இந்த மனு மீது கடந்த ஆகஸ்ட் 29_ம்தேதி ரகசிய விசாரணை நடைபெற்றது. பின்னர் 4_ம் தேதி விசாரிக்கப்பட்டது. அப்போது நீராராடியாவின் டேப் பதிவுகளில் ஏராளமானவை 2ஜி அலைக்கற்றை  வழக்கு மட்டுமின்றி தேச பாதுகாப்பு, ரயில்வே வாரிய உறுப்பினர் நியமன முறைகேடு, வருமாண வரித்துறை மத்திய அமலாக்க துறை தொடர்பானவை என்று தெரிய வந்தது. நீராராடியாவின் பேச்சு அடங்கிய உரையாடல்கள் பல்வேறு காலகட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில மட்டும் அலைக்கற்றை தொடர்புடையவை. எனவே மீதமுள்ள பதிவுகளில் எவை எவை என்று கோர்ட் நி.மித்த குழு ஆய்வு செய்ய வேண்டும். வரும் 17_ம் தேதி தொடகி 3 மாதங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis