முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்களிக்க லஞ்சம் கொடுத்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.8  - 2008_ம் ஆண்டு மக்களவையில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்  எம்.பி.க்கள் வாக்களிக்க லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் அமர்சிங், பாஜக மூத்த தலைவர் அத்வானியின் முன்னாள் உதவியாளர் சுசீந்திர குல்கர்னி, பாஜக எம்.பி.க்கள்      அசோக் அகர்வால், பக்கன்சிங், முன்னாள் எம்.பி. மஹாவீர்சிங், பாஜக ஆதரவாளர் சுஹைல் ஹிந்துஸ்தானி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி நரோத்தம் கவுஷல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைததார்.

முன்னதாக மக்களவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக பாஜக எம்.பி.க்கள் வாக்களிக்க பணம் வாங்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு  ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் என்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அமர்சிங் தரப்பில் விவாதிக்கப்பட்டது.  வாக்களிக்க லஞ்சம் கொடுத்ததை வெளிக்கொணரவே இந்த ரகசிய நடவடிக்கையை மேற்கொண்டதாக  பாஜக எம்.பி.க்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இந்த வழக்கை நாடாளுமன்ற விசாரணைக் குழுவே நிராகரித்துள்ளது என்று போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. 

2008_ம் ஆண்டு ஐக்கி.ய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது பாஜக எம்.பி.க்கள் மக்களவைத் தலைவர் முன்பு கூடி பைகளில் மறைத்து வைத்திருந்த கட்டுக் கட்டாக பணத்தை மேஜை மீது போட்டனர். இதுதொடர்பாக நாடாளுமன்ற விசாரணைக் குழு ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் மீது வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்தது. இதையடுத்து 2009_ம் ஆண்டு இதுதொடர்பான வழக்கை டெல்லி போலீஸார் பதிவு சய்தனர். 

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis