விளம்பர வருமானம் - கேப்டன் தோனிக்கு 10-வது இடம்

Dhoni 2

 

லண்டன், மே. 21 - விளம்பர வருமானத்தில் உலக அளவில் நடந்த சர்வேயில் இந்திய கிரி க்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி 10 -வது இடத்தைப் பிடித்து இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு - விளம்பர வருமானத்தில் உலகில் முன்னணியில் உள்ள விளையாட்டு வீரர்கள் பட்டியலை இங்கிலாந்தின் ஸ்போர்ட்ஸ் பீரோ மாத இதழ் வெளியிட்டுள்ளது. இதில் மேற்கண்ட தகவல் தெரியவந்துள்ளது. 

இந்தப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு 10 -வது இடம் கிடைத்துள்ளது. பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால், கூடை ப் பந்து வீரர் பிரையன்ட் ஆகியோரால் முதல் 10 இடங்களுக்குள் வர முடியவில்லை. 

ஜமைக்காவின் ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்ட் முதல் இடத்தை ப் பிடித்து உள்ளார். இதுவரை முதல் இடத்தில் இருந்த கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் 2 - வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 

பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டோ 3 -வது இடத்தையும், அர்ஜெ ன்டினா கால் பந்து வீரர் லியோனல் மெஸ்சி 4 -வது இடத்தையும் பிடி த்துள்ளனர். 

டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 9 -வது இடத் தைப் பிடித்து இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு 49 -வது இடம் கிடைத்துள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெற்றிக்கான ரன்களைக் குவித்ததன் மூலம் தோனிக்கும், தொடர் நாயகன் விருதினைப் பெற்றதன் மூலம் யுவராஜ் சிங்கிற்கும், விளம்பர வருமானம் குவிந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ