பெட்ரோல் விலை உயர்வு: கேரளாவில் வேலை நிறுத்தம்

petrol-price-hike1 0

திருவனந்தபுரம், மே21 -பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கேரளாவில் நேற்று போக்குவரத்து சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.ஏற்கனவே பலமுறை பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியது.

இதற்கு பா.ஜ.க.  மற்றும் இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி கேரளாவில் நேற்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 12 மணி நேர பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐ.என்.டி.யு.சி  உள்ளிட்ட பல மத்திய தொழிற்சங்கங்கள் அடங்கிய கூட்டு ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடத்தப்பட்ட இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக கேரளாவில் பஸ்கள் ஓடவில்லை. டாக்சி மற்றும் ஆட்டோக்களும் ஓடவில்லை. தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லையில் லாரிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 

தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாயினர். பெட்ரோல் விலை உயர்வை ஈடுகட்ட கேரள முதல்வர் உம்மன் சாண்டி பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைக்க போவதாக அறிவித்து இந்த வேலை நிறுத்த போராட்டத்தை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த வேண்டுகோளை போக்குவரத்து  தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ