முக்கிய செய்திகள்

சீமான் பாராட்டு - ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      சினிமா
Image Unavailable

சென்னை, ஜூன்.- 13 - இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்கும் தீர்மானம் இலங்கைக்கு எதிரான பொருளாதார தடை, கச்சத்தீவை மீட்கும் தீர்மானம் சட்டசபை வரலாற்றிலேயே முக்கியமான நிகழ்வுகளாகும் தீர்மானத்தை நிறைவேற்றிய ஜெயலலிதா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வரும் 18-ம் தேதி பாராட்டு விழா நடத்த போவதாக இயக்குநர் சீமான் தெரிவித்தார். சென்னையிலுள்ள நாம் தமிழர் கட்சி அலுவலக்ததில் கட்சியின் சார்பு அமைப்பான ஆன்றோர் ஆவையம் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நடிகர் சத்யராஜ், டைரக்டர் மணிவண்ணன், தலைவர் பொறுப்பு வகிக்கும் பேராசிரியர் அறிவரசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பின்னர் சீமான், சத்யராஜ், மணிவண்ணன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அவர்கள் கூறியதாவது:-
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் தமிழக தீர்மானங்கள் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக சட்டமன்ற வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வாகும். இந்த தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வருகிற 18-ம் தேதி சைதாப்பேட்டை தேரடி திடலில் பொதுக்கூட்டம்  நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கச்சத்தீவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் நன்றி தெரிவிக்க உள்ளோம். மேலும் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களிலும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் நிறைறேற்றப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதும் பாராட்டுகுரியது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: