தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,ஜூலை.19 - இந்தியாவுடன் இரண்டாவது கட்டமாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் உயர்மட்டக்குழுவுடன் நேற்று இரவு புதுடெல்லி வந்தார். மாறிவரும் உலக சூழ்நிலையில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளிடையே நெருங்கிய ஒத்துழைப்பு கட்டாய தேவையாக மாறி வருகிறது. ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து நட்புறவு இருந்து வருகிறது. அதேசமயத்தில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நட்பில் தொய்வு ஏற்பட்டது. இந்த தொய்வு காலம் மாற மாற குறைந்து மீண்டும் நட்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பலப்பட்டு வருகிறது. மேலும் இருநாடுகளும் தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் தீவிரவாதத்தை ஒழிக்க இருநாடுகளும் ஒத்துழைத்து செயல்பட வேண்டியுள்ளது. அதேசமயத்தில் இந்தியாவில் மின்சார தேவை அதிகரித்து வருவதால் அதை சமாளிக்க மரபு சாரா வழிமுறைகளை இந்தியா கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. இதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பும் தேவையாக உள்ளது. மேலும் இரு நாடுகளும் ஜனநாயக நாடுகளாக இருப்பதால் இதர உலக நாடுகளில் ஜனநாயகத்தை காப்பாற்ற காவலாளர்களாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்ட இரு நாடுகளும் வர்த்தகம், பொருளாதாரம், விஞ்ஞானம் ஆகிய துறைகளையும் தாண்டி இதர துறைகளிலும் ஒத்துழைத்து செயல்பட வேண்டியுள்ளது. இதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இந்தியாவுக்கு நேற்று இரவு வந்தார். அவருடன் உயர்மட்டக்குழுவினரும் வந்துள்ளனர். அமெரிக்க புலனாய்வுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர், அதிபர் ஒபாமாவின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் ஜான் ஹோல்ட்ரன், அமெரிக்க எரிசக்தி துறை துணை செயலாளர் டேனியல் போனிமேன், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை துணை செயலாளர் ஜனி லுதே மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்களும் அதிகாரிகளும் ஹில்லாரியுடன் வந்துள்ளனர்.
இன்று காலையில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை கிளிண்டன் சந்தித்து பேசுகிறார். அதனையடுத்து அமெரிக்க உயர்மட்ட குழுவானது ஹில்லாரி தலைமையில் இந்திய உயர்மட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்திய தரப்பில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தலைமையில் உயர்மட்டக்குழு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கிறது. இந்திய தரப்பில் எஸ்.எம். கிருஷ்ணா, திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டக் சிங் அலுவாலியா, பிரதமரின் ஆலோசகர் டாக்டர் சம் பித்ரோடா,வெளியுறவு செயலாளர் நிரூபாமா ராவ், வெளியுறவு செயலாளர் பொறுப்பை ஏற்கவிருக்கும் ரஞ்சன் மதாய், வர்த்தகத்துறை செயலாளர்,விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், கல்வித்துறை செயலாளர், சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர், புலனாய்வுத்துறை இயக்குனர், மத்திய அரசின் இணை செயலாளர் ஜவெத் உள்பட உயரதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். பேச்சுவார்த்தையின்போது வர்த்தகம், தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவது, கடந்த 13-ம் தேதி மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம், ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் எல்லைப்பகுதி விவகாரம், சர்வதேச அணுசக்தி அமைப்பிடம் இருந்து சலுகை பெறுவது ஆகியவைகள் இடம் பெறும் என்று தெரிகிறது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஹில்லாரியும் எஸ்.எம். கிருஷ்ணாவும் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கின்றனர்.
எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர்களையும் சந்தித்து பேசுகிறார். அதனையடுத்து நாளை மறுநாள் சென்னை வருகிறார். சென்னையில் பல்வேறு இடங்களுக்கு ஹில்லாரி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
காங்கிரஸ் கட்சியில் இருந்து கபில் சிபல் திடீரென விலகல்
25 May 2022லக்னோ : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் அக்கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார்.
-
கொலை முயற்சியில் உயிர் தப்பிய புடின் : உக்ரைன் அதிகாரி திடுக்கிடும் தகவல்
25 May 2022கீவ் : ரஷ்ய அதிபர் புடினை கொல்ல இரண்டு மாதங்களுக்கு முன் முயற்சி நடந்ததாகவும், அதில் அவர் தப்பித்ததாகவும் உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
இந்து கடவுள்களை இழிவுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். வேண்டுகோள்
25 May 2022சென்னை : இந்து கடவுள்களை இழிவுபடுத்திப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
-
ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு
25 May 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவை நேரில் சந்தித்து நலம் வ
-
இளைஞர் சக்தியை உருவாக்க கல்வியை தந்தாக வேண்டும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
25 May 2022சென்னை : இளைஞர் சக்தியை உருவாக்க கல்வியை தந்தாக வேண்டும். அடிப்படை கல்வி மட்டுமல்ல உயர்கல்வியும் தந்தாக வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்
25 May 2022சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சி மடுவண்கரை, கிண்டி மற்றும் ஆலந்தூர் (எம்.கே.என்.நகர்) பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய
-
நிதித்துறை அமைச்சராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்பு
25 May 2022கொழும்பு : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூடுதல் பொறுப்பாக நிதித்துறை அமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
-
உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு
25 May 2022லண்டன் : உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்க கோரி பயங்கர கலவரம்: ஆந்திரா, கோணசீமாவில் 2-வது நாளாக 144 தடை - இணையதள சேவை துண்டிப்பு
25 May 2022திருமலை : அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்க கோரி ஆந்திராவில் நடந்த பயங்கர கலவரம் காரணமாக நேற்று கோணசீமாவில் 2வது நாளாக 144 தடை நீட்டிக்கப்பட்டு, இணையதள சேவையும் துண்டிக்கப்
-
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
25 May 2022பியாங்கியாங் : அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஜப்பானில் நடந்த குவாட் அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தனது நாட்டுக்கு புறப்பட்ட சில மணி நேரத்தில் வடகொரியா ஏவுகணை ச
-
அமைச்சர் சாமிநாதனின் தாயார் மறைவு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
25 May 2022சென்னை : தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
டூவீலரில் பின்னாள் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற விதி மும்பையில் அமலுக்கு வருகிறது
25 May 2022மும்பை : இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் இருப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என மும்பை மாநகர காவல் அறிவித்துள்ளது.
-
புதிதாக 2,124 பேருக்கு கொரோனா தொற்று- இந்தியாவில் தினசரி பாதிப்பு சற்று உயர்வு
25 May 2022புதுடெல்லி : இந்தியாவில் புதிதாக 2,124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
-
நாசா வெளியிட்ட கேலக்ஸியின் புதிய புகைப்படம் வைரல்
25 May 2022நியூயார்க் : நாசா விண்வெளி ஆய்வு மையம் கேலக்ஸியின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
-
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு : முற்றுப்புள்ளி வைப்பது எப்போது என பைடன் ஆதங்கம்
25 May 2022டெல்சாஸ் : அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது.
-
சட்டவிரோத பணபரிவர்த்தனை: எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
25 May 2022டெல்லி : சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பங்கு சந்தை முறைகேடு:ரூ.3.12 கோடி அபராதத்தை செலுத்த சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு நோட்டீஸ்
25 May 2022புதுடெல்லி : பங்கு சந்தை முறைகேட்டில் ரூ.3.12 கோடி அபராத தொகையை செலுத்த சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு செபி மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
பிரதமர் மோடி இன்று ஐதராபாத் வருகை: 930 மாணவர்களின் சமூக வலைதள பக்கங்கள் ஆய்வு
25 May 2022பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐதராபாத் வர உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
-
சமையல் எண்ணெய், கோதுமையை தொடர்ந்து சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு
25 May 2022புதுடெல்லி : கரும்பு அரவைப் பருவத்தில் சர்க்கரை இருப்பை பராமரிப்பதற்காகவும், விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் 2022 ஜூன் 1-ம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு
-
கடந்த 3 ஆண்டுகளில் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் 20,100 குவிண்டால் ரேசன் அரிசி பறிமுதல் : குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை விளக்கம்
25 May 2022சென்னை : கடந்த 3 ஆண்டுகளில் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் 20,100 குவிண்டால் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது
-
கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு : அரசு சேவைகள் தொய்வின்றி வழங்க உத்தரவு
25 May 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கிண்டி, வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
-
சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25.66 கோடி வங்கிக் கடன் இணைப்புகள்: மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழா : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
25 May 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.
-
மேட்டூர் அணை நீர்வரத்து 8,539 கன அடியாக சரிவு
25 May 2022சேலம் : மேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று 8,539 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 117.92 அடியாக உள்ளது.
-
காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து 5,000 கனஅடி தண்ணீர் திறப்பு
25 May 2022காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 8539 கனஅடியாக சரிந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 25-05-2022
25 May 2022