முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: மனம் திறந்த விராட் கோலி

புதன்கிழமை, 9 ஜூலை 2025      விளையாட்டு
Verat Koil 2023 08 13

Source: provided

லண்டன் : இந்திய கிரிக்கெட்டின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் அதுகுறித்து தற்போது மனம் திறந்துள்ளார்.

முதல் முறையாக... 

இந்திய கிரிக்கெட்டின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011இல் அறிமுகமான அவர் 2025 வரை 123 போட்டிகளில் 9230 ரன்களை அடித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அவருடைய தலைமையில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது இந்தியா. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான இந்திய கேப்டன் என அழைக்கப்பட்டார்.

வாய்ப்பு தவறவிட்டார்...

36 வயதிலும் சிறப்பான பிட்னஸ் கொண்டிருந்த அவர், இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் திடீரென ஓய்வு பெற்றது பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை அடிக்கும் பொன்னான வாய்ப்பை விராட் கோலி வெறும் 770 ரன்கள் வித்தியாசத்தில் தவற விட்டது அவருடைய ரசிகர்களை சோகமடைய வைத்தது.

நிரூபிக்க எதுவுமில்லை....

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தம்மால் முடிந்த அனைத்தையும் இந்தியாவுக்காக கொடுத்து விட்டதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். இனிமேலும் சாதிக்கவோ நிரூபிக்கவோ எதுவுமில்லை என்று உணர்ந்ததாலேயே ஓய்வு பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, என்னுடைய தாடியை 2 நாட்களுக்கு முன்பாகத்தான் வர்ணம் செய்தேன். உங்களுடைய தாடியை ஒவ்வொரு 4 நாட்களுக்கு ஒரு முறை வர்ணம் பூசினால் உங்கள் (விடை பெறும்) நேரம் வந்து விட்டது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த முடிவு எளிதானது கிடையாது என்றாலும் சரியானதாக உணர்கிறேன். என்னால் முடிந்த அனைத்தையும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கொடுத்து விட்டேன். அதுவும் நான் நம்பியதை விட எனக்கு அதிகமாகவே திரும்பிக் கொடுத்துள்ளது. அதனால் மிகுந்த நன்றியுணர்வுடன் இந்த விளையாட்டிலிருந்து வெளியேறினேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து