முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியா விவகாரம் - அமெரிக்காவுக்கு கம்யூ. எதிர்ப்பு

வெள்ளிக்கிழமை, 4 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,மார்ச்.4 - லிபியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொலிட் பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், லிபியாவில் எந்த முறையிலான ஆட்சி வேண்டும். பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து அந்நாட்டு மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். இதில் மூன்றாவது தரப்பு தலையிடக் கூடாது. 

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் லிபியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சித்து வருகின்றன. இது கண்டிக்கத்தக்கது. மனித உரிமைகளை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் லிபியாவின் இறையாண்மையை மீறி செயல்பட அமெரிக்கா முயற்சிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்