முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வர்த்தக நகரான நியூயார்க்கில் நிலநடுக்கம்

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

நியூயார்க்,ஆக.25 - இந்தியாவில் வர்த்தக நகரான மும்பை போன்று அமெரிக்காவின் வர்த்தக நகரமான நியூயார்க்கில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அளவு ரிக்டரில் 5.8ஆக பதிவாகி இருந்தது. இதனால் நியூயார்க் நகரில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. துறைமுக நகரான நியூயார்க் நகரில் கடந்த செவ்வாய் அன்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையொட்டி அடுக்கமாடி கட்டிடங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் கீழே கொண்டுவரப்பட்டு தங்க வைக்கப்பட்டனர் என்று நியூயார்க் நகர மேயர் மைக்கேல் பூலூம்பர்க் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தில் எந்தவித சேதமும் இல்லை என்றும் இதற்காக கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் மைக்கேல் தெரிவித்தார். அனைத்து சேவைகளும் மாமூல் நிலைமைக்கு திரும்பியுள்ளன. பாதாள ரயில் போக்குவரத்து உள்பட அனைத்துவிதமான போக்குவரத்துகளும் வழக்கமாக நடைபெற்று வருகின்றன. இந்த பூமி அதிர்ச்சியானது வர்ஜினீயாவில் மையம் கொண்டியிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis