முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் நியமனம்

வியாழக்கிழமை, 8 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.8 - ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக முருகன் எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.சி.ஆணிமுத்து அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் மு.முருகன் (முதுகுளத்தூர் பேரூராட்சி செயலாளர்) நியமிக்கப்படுகிறார். கட்சியின் உடன்பிறப்புகள் இவருக்கு முழுஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்