முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் வேண்டுகோள்: கூடங்குளம் உண்ணாவிரதம் வாபஸ்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை-செப்-23 - தமிழக முதல்வர் வேண்டுகோளுக்கிணங்க கூடங்குளம் உண்ணாவிரத போராட்டத்தை போராட்ட குழு வாபஸ் பெற்றது. நெல்லை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இடிந்தகரையில் கடந்த 12 நாட்களாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 127 பேர் தொடர் உண்ணாவிரதத்தில் இருந்தனர். போராட்டம் வழுவானதை தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்த தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் ஆம்புரூஸ்,கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர்ரெமிஜூயூஸ், போராட்ட குழு அமைப்பாளர் உதயகுமார் உள்ளிட்ட 9 பேர் அடங்கிய குழு நேற்று முன் தினம் இரவு சென்னை புறப்பட்டு சென்றது. இந்த குழு நேற்று முதல்வரை சந்தித்து அமைச்சரவையை கூட்டி கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிறுத்தி வைக்க தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று வலியுறுத்தினர்.

கோரிக்கையை முதல்வரும் ஏற்பதாக தெரிவித்ததால் அவர்கள் பேராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இருப்பினும் இன்று காலை வரை போராட்டம் தொடர்ந்தது. இன்றும் அங்குள்ள மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. சென்னை சென்ற போராட்ட குழுவினர் இன்று காலை 10.30 மணிக்கு உண்ணாவிரத பந்தலுக்கு வந்தார்கள்.

அங்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் ஆம்புரோஸ் நிருபர்களிடம் கூறியதாவது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை அடியோடு மூடவேண்டும் என்றும், இது சம்மந்தமாக அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். முதல்வர் எங்களது கோரிக்கையை ஏற்று அமைச்சரவையில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றபடும் என்று உறுதியளித்தார்.

இருப்பினும் அணு உலைகள் கட்டுப்பாடு முழுவதும் மத்திய அரசிடம் உள்ளதால் முழுமையாக மூடுவது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்கவேண்டும் என்றார். எனவே முதல்வரின் உறுதிமொழி மற்றும் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்துவது என்று முடிவு செய்துள்ளோம் என கூறினார். 

இதனை தொடர்ந்து அனைவருக்கும் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்