முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் ஆறு மாத ஆட்சிக்கு கிடைத்த வெற்றி

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, அக்.22 - உள்ளாட்சி தேர்தல் முடிவு முதல்வர் ஜெயலலிதாவின் ஆறுமாத கால ஆட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து டாக்டர் சேதுராமன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசிற்கு மக்கள் ஒரே மனநிலையில் வாக்களித்திருப்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. தமிழக தேர்தல் ஆணையம் மிகவும் நேர்மையுடன் இந்த தேர்தலை நடத்தி சிறப்பாக முடித்திருப்பதற்கு தேர்தல் ஆணையாளரை நாங்கள் பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். 

கடந்த  2006-ம் ஆண்டு உள்ளாட்சி மன்ற தேர்தலில் மாநிலம் முழுவதும் அரசு எந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து உள்ளாட்சி அமைப்பையே சீரழித்தது தி.மு.க. ஆட்சி. ஆனால் இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மிக நேர்மையுடன் வெளிப்படையாக தேர்தலை நடத்தியிருப்பது ஜனநாயகத்தை தழைக்க வைத்துள்ளது.  நகரம் முதல் கிராமம் வரை மக்களுக்கான அடிப்படை தேவைகள் பெறுவதற்கு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி தான் நமக்குத் தேவை என்பதை மக்கள் உணர்ந்து வாக்களித்திருக்கிறார்கள்.  அசுர பலம்மிக்க ஒரு மிகப்பெரிய வெற்றியை மக்கள் தீபாவளி பரிசாக முதல்வருக்கு வழங்கியிருக்கிறார்கள். 

மாநில அரசின் செயல்பாடுகள் இனி நேரடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைப்பதில் எந்தவித தடையும் இருக்காது.  மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு நேரடியாக சென்றடையும் வகையில் தேர்தல் முடிவு உருவாக்கப்பட்டிருக்கிறது. பத்து மாநகராட்சிகளிலும் மகத்தான வெற்றியை முதல்வர் ஜெயலலிதா அரசிற்கு வழங்கியுள்ள மக்கள், அரசிடம் தங்களது நம்பிக்கையை மீண்டும் விதைத்திருக்கிறார்கள் உள்ளாட்சித்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட்ட அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழக நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!