முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி தலைவிக்கு கொலை மிரட்டல்

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம்,நவ.11​- ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி தலைவியை வெடிகுண்டுவீசி கொலை செய்துவிடுவதாக மிரட்டிய திமுக கவுன்சிலர் மகன் மீது ராமநாதபரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.       ராமநாதபரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி தலைவியாக அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அஇஅதிமுகவை சேர்ந்த சிராஜ்நிஷாஅஜ்மல்கான் என்பவர் இருந்து வருகிறார். கடந்த பல ஆண்டுகாளக திமுகவசம் இருந்த இந்த பேரூராட்சியை இந்த தேர்தலில் அஇஅதிமுக கைப்பற்றியுள்ளது. அதனால் அத்திரமடைந்த திமுக கவுன்சிலர் பழனிவேல் மகன் அழகேசன் என்பவர் நேற்று மாலை கைபேசி; மூலம் பேருாட்சி தலைவியின் கணவர் அஜமல்கானை தொடர்பு கொண்டு அவதுாறு வார்த்தைகளால் பேசி வெடிகுண்டுவீசி பேரூராட்சி தலைவியுைம் அவரது குடும்பத்தையும் கொன்று விடுவேன் என்றும் இடைத்தேர்தலை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளார். இது குறித்து அஇஅதிமுக பேரூராட்சி தலைவி மற்றும் அஇஅதிமுக கவுன்சிலர்கள் ராமநாதபுரம் எஸ்.பி.யை நேரில் சந்தித்து கொலைமிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேரூராட்சி தலைவிக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பேரூராட்சி தலைவியின் கணவர் அஜ்மல்கான் அளித்த பேட்டியில்,  பல ஆண்டுகளாக திமுக வசம் இருந்த இந்த பேரூராட்சியை இந்த தேர்தலில் அம்மா அவர்களின் ஆசியால் அஇஅதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதனை பொறுக்க முடியாமல் திமுக கவுன்சிலர் பழனிவேல் மகன் அழகேசன் என்பவர் கைபேசியில் என்னி;டம் பேரூராட்சி தலைவியை குடும்பத்துடன் வெடிகுண்டுவீசி கொலை செய்துவிடுவதாகவம் இடைத்தேர்தலை சந்திக்க நேரிடும் என்றம் மிரட்டல் விடுத்தார். இது குறித்து எஸ்.பியிடம் புகார் செய்துள்ளோம். அம்மா அவர்களுக்கும் புகார் மனு அனு;ப்பியுள்ளோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!