முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அங்கன்வாடி காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.11 - அங்கன்வாடியில் உள்ள 11 ஆயிரம் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் குழந்தைகள் தினம், அயோடின் தினம், உலக உணவு நாள், உலகளாவிய கை தூய்மை நாள், தேசிய ஊட்டசத்து வாரம் ஆகியவை சென்னை தியாகராய நகரில் உள்ள தியாகராஜர் அரங்கில் நடைபெற்றது. 

விழாவை தொடங்கி வைத்து அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசுகையில், இப்போது பெரும்பாலும் அறுவை சிகிச்சை மூலம்தான் தாய்மார்கள் குழந்தைகளை பெற்றெடுக்கின்றனர். எனவே சிசு சீராக வளர தடுப்பூசி, ஊட்டச் சத்து மாவு ஆகியவற்றை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு தடுப்பூசி, தாய்ப்பால் அளித்து ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து அங்கன்வாடி ஊழியர்கள் உரிய நேரத்தில் எடுத்துக் கூற வேண்டும். 

தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய கட்டுமான பணிகளுக்காக ரூ. 47 கோடி மின் இணைப்பு, மின் உபகரணங்கள் வாங்க ரூ. 27 கோடி, பாலர் கழிவறை கட்ட ரூ. 24 கோடி என இந்தாண்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடியில் உள்ள 11,803 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர் கலைராஜன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சிறப்பு ஆணையர் மீனாட்சி ராஜகோபால், இந்திய உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரிய துணை தொழில் நுட்ப ஆலோசகர் பன்வால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!