முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு இந்தியா - நேபாளம் ஒப்பந்தம்

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

காத்மண்டு, நவ. - 29 - இந்தியாவும், நேபாளமும் திருத்தப்பட்ட இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் 1987 ல் போடப்பட்ட ஒப்பந்தத்திற்கு மாற்றாக அமையும்.  இதில் இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், நேபாள நிதியமைச்சர் பர்ஜமனும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி நேபாளத்தில் ஒரு முறை வரி செலுத்தி விட்டால் இந்தியாவில் மறுபடி வரி செலுத்த வேண்டியதில்லை. இரு நாட்டு வங்கிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் சாத்தியமாகும். உள்நாட்டு வட்டி விகிதம் தவிர்த்த மற்ற வங்கி தகவல்களை பரிமாறிக் கொள்ள இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது.  தகவல் தந்த நாட்டின் சம்மதத்துடன் அந்த தகவலை சட்ட அமலாக்க துறையுடன் பகிர்ந்து கொள்ளவும் ஒப்பந்தம் வழி செய்கிறது. இதனால் வரி ஏய்ப்பை தவிர்க்க முடியும். அதிகளவில் இந்திய முதலீட்டாளர்களை நேபாளம் கவர முடியும். இது குறித்து பிரணாப் முகர்ஜி கூறுகையில், இந்த ஒப்பந்தம் இரு தரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும். இதுவரை நேபாளத்தையும் சேர்த்து 82 நாடுகளுடன் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago