Idhayam Matrimony

தாறுமாறாக ஓடிய வேன் மோதி மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் பலி

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

கல்பாக்கம், ஜன.- 2 - கல்பாக்கம் அருகே மது போதையில் வேனை தாறுமாறாக ஓட்டிய டிரைவர் புத்தாண்டை கொண்டாட மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியானார்கள். இதுபற்றிய விபரம் வருமாறு:- கல்பாக்கம் அடுத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்த பாலுபிள்ளை என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி(40). செல்வராஜ்பிள்ளை என்பவரின் மகன் மேகநாதன்(30). அதேபோல் நத்தம் கிராமத்தை சேர்ந்த கங்காதரன் என்பவரின் மகன் சுந்தர்ராஜ்(28). ரங்கப்பன் என்பவரின் மகன் பூபதி(40). இவர்கள் நால்வரும் பஜாஜ் டிஸ்கவர் இரு சக்கர வாகனத்தில் ஒரு வாகனத்தில் 2 பேர் வீதம் சொந்த வேலையாக கல்பாக்கம் சென்றுவிட்டு திருக்கழுக்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது நத்தம் அருகே திருக்கழுக்குன்றத்தில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த வேன் எதிர்பாராதவிதமாக 2 இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதனால் அருகில் இருந்த பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.  தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் ஆய்வாளர் ராஜேஷ், கல்பாக்கம் ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளர்கள் ரமேஷ், தனபால், ஆறுமுகம், பெருமாள் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன், மாமல்லபுரம் துணை கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.  விபத்தின் காரணமாக நேற்று முன்தினம் காலை 8.30 மணியில் இருந்து திருக்கழுக்குன்றம்- கல்பாக்கம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேனை ஓட்டி வந்த குழிப்பாந்தண்டலத்தை சேர்ந்த ஓட்டுநர் பிரகாசை போலீசார் கைது செய்தனர். டிரைவர் பிரகாஷ் அளவுக்கதிகமான போதையில் வேனை தாறுமாறாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்த வேன் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மீது மோதியுள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக திருக்கழுக்குன்றம் ஆய்வாளர் ராஜேஷ், சதுரங்கப்பட்டினம் உதவி ஆய்வாளர் தனபால் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.       

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago