கோவா தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

பனாஜி,பிப்.10 - கோவா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 2-வது வேட்பாளர்கள் பட்டியலை பாரதிய ஜனதா நேற்று வெளியிட்டது. இதில் 6 பேர் இடம் பெற்றுள்ளனர். உத்திரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் மணிப்பூர், பஞ்சாப்,உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் முதல் கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. இன்னும் 6 கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. கடைசி கட்ட தேர்தல் மார்ச் மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. கோவா மாநில சட்டசபைக்கும் மார்ச் மாதம் 3-ம் தேதிதான் தேர்தல் நடக்கவுள்ளது. இந்தநிலையில் பாரதிய ஜனதா தனது 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 6 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 2 பேர் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாரதிய ஜனதாவுக்கு வந்தவர்கள். மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 31 இடங்களில் பாரதிய ஜனதா போட்டியிடுகிறது. 8 இடங்களில் மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி போட்டியிடுகிறது. ஒரு தொகுதியில் இந்த இரண்டு கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளன. பாரதிய ஜனதா வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியலில் 22 பேர் இடம் பெற்றுள்ளனர். 3 தொகுதிகளுக்கு இன்னும் பா.ஜ.வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. இந்த தொகுதியில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளனர். 

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: