முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலுநாச்சியார் நினைவு மண்டபம் திறப்பு

சனிக்கிழமை, 19 ஜூலை 2014      அரசியல்
Image Unavailable

சென்னை.ஜூலை.20 - சூரக்குளம் கிராமத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம், மற்றும் 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னம் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், சிவகங்கை மாவட்டம், சூரக்குளம் கிராமத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம் மற்றும் 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னம் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

நாட்டிற்காக பெரும் தொண்டாற்றி பல்வேறு தியாகங்களைச் செய்த தலைவர்கள் மற்றும் சான்றோர்களை கௌரவிக்கும் வகையிலும், வருங்கால சந்ததியினர் அவர்களின் தியாகங்களை அறிந்து கொள்ளும் வகையிலும், நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு உருவாக்கி பராமரித்து வருகிறது.

இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி வெற்றி கண்ட முதல் பெண்மணியும், தன்னிகரற்ற வீரத்தால் தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்தவரும், சிவகங்கை சீமையை ஆட்சி செய்தவருமான ராணி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவாக சிவகங்கையில் நினைவு மண்டபம் தமிழ்நாடு அரசால் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, சிவகங்கை மாவட்டம், சூரக்குளம் கிராமத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

அதேபோன்று, வீரமங்கை வேலுநாச்சியாரின் மெய்க்காவலராய் விளங்கி வெள்ளையர்களை அழித்து தன் உயிரையும் தியாகம் செய்த வீரத்தாய் குயிலி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படவிருக்கும் வளாகத்திலேயே வீரத்தாய் குயிலி அவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா 15.5.2013 அன்று சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, சிவகங்கை மாவட்டம், சூரக்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டப வளாகத்தில் 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் எம். சாய்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெ. குமரகுருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago