முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நினைப்பது ஒன்று.... நடப்பது ஒன்று...

புற்று நோயை குணப்படுத்தவும், அது மேலும் பரவாமல் தடுக்கவும் பலவிதமான மருந்துகள் உட்கொள்ளப்படுகின்றன. அதனால் உடல் உறுப்புகளுக்கு பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், அந்த மருந்துகள் இதயத்தின் திசுக்களை வலுப்படுத்தி அவை நல்ல முறையில் செயல்பட புத்துயிர் அளிப்பது தெரிய வந்துள்ளது. இதனால் ரத்த செல்கள் மற்றும் ரத்த ஓட்டத்தில் தடை உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும். எனவே மாரடைப்பு, இதய நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு ஏற்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவலை ஆய்வு மேற்கொண்ட டெக்காஸ் பல்கலைக்கழகத்தின் தென் மேற்கு மருத்துவ மைய மருந்து பிரிவு பேராசிரியர் லாரன்ஸ்லம் தெரிவித்துள்ளார்.

இடது கை பழக்கம் உள்ளவர்கள் மரணம் ஏற்பட என்ன காரணம் தெரியுமா?

நம்மில் பலரையும் நாம் பார்த்திருக்க கூடும். அவர்கள் நம்மை போல அல்லாமல் இடது கை பழக்கம் உடையவர்களாக இருப்பர். இடது கையால் எழுதுவது, இடது கையால் வேலைகளை செய்வது, சாப்பிடுவது. அவ்வளவு ஏன் நமது கிரிக்கெட் வீரரான சிகர் தவான் போன்றவர்கள் விளையாட்டில் கூட பட்டையை கிளப்புவதை பார்த்திருக்கலாம்... ஆனால் ஒன்று தெரியுமா இந்த உலகம் வலது கை பழக்கமுடையவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இடது கை பழக்கமுடையவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வலது கை காரர்கள் உருவாக்கிய கருவிகளால் சுமார் 2500 பேர் வரை இடது கை பழக்கமுடையவர்கள் உயிரிழக்கும் நிலை உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்ன ஒரு உலகம் பாருங்கள்.

அதிக நேரம் அல்ல, 3 ஆண்டுகள் தூங்கும் உயிரினம் எது தெரியுமா?

அதிக நேரம் தூங்கும் உயிரினம் எது என்று கேட்டவுடன் நமக்கு கும்பகர்ணன் நினைவுக்கு வரும். அதெல்லாம் கதைக்குத்தான், மனிதனால் 6 மாதம் எல்லாம் தூங்க இயலாது. அது கிடக்கட்டும். கரடியின் குளிர்காலத் தூக்கம் ரொம்ப பிரபலமானது. உணவின்றி சுமார் 8 மாதங்கள் வரை கரடி கும்பகர்ணத் தூக்கம் போடுவதுண்டு. பாறைகளுக்கு இடையே, மரப்பொந்துகளில் எனப் பாதுகாப்பாகக் கரடிகள் தூங்கும். இதில் சாம்பியன் கரடி என்று நீங்கள் நினைத்தால் தவறு.. அது குட்டியூண்டு நத்தை தான். இவை 3 ஆண்டுகள் வரை தூங்குமாம். சில பாலைவன நத்தைகள் தரைக்கடியில் குழி தோண்டி அதில் மூன்று வருடங்கள் வரை கூட தூங்குகின்றன.

64 ஆண்டுகளுக்கு பின்...

உலகில் வாழும் அரிய வகை பாம்புகளில் ஒன்று தொண்டை சுருக்கு பாம்பு. இந்த அரிய வகை பாம்புகள் பிரேசில் காடுகளில் யார் கண்களுக்கு படாமல் உயிர்வாழ்ந்து வந்தது. இந்நிலையில், அரிய வகை தொண்டை சுருக்கு பாம்பு ஒன்று 64 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாம்பு ஒரு பெண் இனம். பாம்பின் நீளம் 1.7 மீட்டர். எடை 1.5 கிலோகிராம்.

எண்ணெய் குளியல்

ஒரு நிகழ்வு நடப்பதற்கு முன்பாக அது நடந்துவிட்டதாக நினைத்துப் பயப்படுவது. நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டால் ஏற்படுகிறது. இதற்கு தலையில் க்ஷீரபலா எண்ணெய், பலா அஸ்வகந்தா எண்ணெய் போன்றவற்றைத் தேய்ப்பதால் நரம்பு மண்டலத்தின் துரித நிலை குறைக்கப்படுகிறது. இந்த எண்ணெய் குளியல் பதற்றத்தைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த மருந்து.

எங்கும் 'கார்டு'

ரேஷன் கடைகளில் ஸ்வைப் மிஷின் வரப்போவதாக சொல்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பே கோயிலுக்குள் நுழைந்து விட்டது ஸ்வைப் மிஷின். திருச்சி மாவட்டம் திருவரங்கம் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஸ்வைப் மிஷின் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பதியிலும் இந்த மிஷின் வைக்கப்பட்டுள்ளதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago