Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

குறையாத மோகம்

உலகில் ‘செல்பி’ எடுக்கும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆபத்தான இடங்களில் ‘செல்பி’ எடுக்கும் பழக்கத்தினால், இந்தியாவில் 76 பேர் மரணமடைந்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த கார்நிகி மெலன் பல்கலைக்கழக ஆய்வு குழு தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பலர் இளம் வயதினர்.

பூமியின் பரிணாம வளர்ச்சியில் பறவைகள் எப்படி தோன்றின தெரியுமா?

பொதுவாக மீன்கள் போன்ற நீர் வாழ் விலங்குகளிலிருந்து பறவைகள் தோன்றியிருக்கலாம் நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் பறவைகள் பரிணாம வளர்ச்சியில் டினோசர்களிடமிருந்தே தோன்றியதாம். இவை இரண்டும் ஊர்வன இனங்களிலிருந்து தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக பறவையானது முதலையிலிருந்தே தோன்றியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதே போல திமிங்கலம், டால்பின் ஆகியவற்றுக்கு ஒரு காலத்தில் பின்னங்கால்கள் இருந்தனவாம். அதன் அடையாளமாக அவற்றின் உடலில் ஒரு சிறிய எலும்பு உள்ளது. இதுதான் அவற்றுக்கு பின்புற துடுப்பாக மாற்றமடைந்திருக்கலாம் என்கின்றனர். என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்.

அதிசய சிறுமி

வங்கதேசத்தை சேர்ந்த சோய்டி கதூன் என்ற குழந்தை 3 காலுடன் பிறந்தது. இடுப்புடன் இணைந்த 3-வது கால் இருந்ததால் நடக்க முடியாமல் சிரமப்பட்ட அந்த சிறுமிக்கு ஆஸ்திரேலியாவின் மோனாஷ் சிறுவர்கள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின் சோய்டியால் நடக்கவும், ஓடவும் முடிகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வயது தடையில்லை

ஹெலன் வேன் விங்கிள் என்ற 87 வயதான மூதாட்டி, ‘பாடி விங்கிள்’ என்ற பெயரில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர்.இவர் கணக்கு தொடங்கிய மிகக் குறுகிய காலத்திலேயே இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோவர்ஸ், ட்விட்டரில் 2 லட்சத்து 20 ஆயிரம் பாலோவர்ஸும் உள்ளனர். நடிகை கர்தாஷியன் உடன் இவர் சேர்ந்து இருக்கும் போட்டோவிற்கு 88.3K லைக்குகள் கிடைத்ததாம்.

3-டி பிரிண்ட் பாலம்

உலகில் முதன்முதலாக நெதர்லாந்தில் 3-டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. அது ஸ்மார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் நீளம் மொத்தம் 8 மீட்டர் ஆகும். இது 800 அடுக்குகளால் ஆன பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 40 லாரிகளை ஒரே நேரத்தில் தாங்கும் அளவு வலிமை வாய்ந்தது.

உப்பின் நன்மை

ஒற்றை தலைவலி வருவதற்கு மோசமான வாழ்க்கை முறையே காரணம். ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபட ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, அத்துடன் சிறிது கல் உப்பை சேர்த்து நன்கு கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒற்றை தலைவலியின் போது குடித்தால், சில நிமிடங்களில் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago