Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சிறு குச்சியே படகு...

அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவை தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன. இது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா? ஆச்சரியம் உண்டு! அப்பறவை, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைகளோ கிடையாது! கடலின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுக்கும்? அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன. ஒரு சிறிய பறவைக்கு  16,600 கி.மீ., பறப்பதற்கு ஒரு சிறுகுச்சி ஆதாரமாக இருக்கிறது என்றால் ஆச்சரியம் தானே..

கேள்விகுறியான மனிதர்களின் எதிர்காலம்

ஜப்பான் நாட்டில் வருகிற 2035-ம் ஆண்டிற்குள் மனிதர்களில் பாதி பேர் அலுவலகங்களில் வேலை பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது. தற்போது ஐ.பி.எம். நிறுவனம் மனிதர்களைப்போல செயற்கை அறிவாற்றல் திறன் பெற்ற ரோபட்டுகளை உருவாக்கியுள்ளது. இந்த ரோபட்டுகள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் வேலைக்காக பணியமர்த்தப்பட்டுள்ளன. அவை, மருத்துவக் காப்பீடுக்கு அளிக்க வேண்டிய தொகைகளை கணக்கிட்டு மின்னல் வேகத்தில் தெரிவிக்கிறது. இந்த செயற்கை அறிவாற்றல் ரோபட்டுகள் மூலமாக  புகுகோகு என்ற மருத்து இன்சூரன்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.8 கோடி செலவினத்தை மிச்சப்படுத்துகிறது. அதே நேரத்தில் அந்த நிறுவனத்தின் பாதி ஊழியர்களின் வேலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

நட்சத்திரம் புதிது

நாசாவின் பெர்மி காமா கதிர் ஸ்பேஸ் டெலஸ்கோப் நடத்திய ஆய்வில் நட்சத்திரம் ஒன்று காமா கதிர்களை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த காமா கதிர்களுக்கு LMC P3 எனப் பெயரிட்டுள்ளனர். கதிர்களை வெளியிடும் நட்சத்திரம் பூமியிலிருந்து 163000 ஒளியாண்டு தூரத்தில் காணப்படுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

அதிவேக போலீஸ் கார்

புகாட்டி வேரோன் ரகக் கார், மணிக்கு 407 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். 2.5 விநாடிகளில் 97 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் இந்தக் காரின் விலை 10 கோடியே 41 லட்ச ரூபாய். இந்த கார் துபாய் போலீஸ் பிரிவில் இணைக்கப்பட்டதன் மூலம், அதிவேகமான போலீஸ் காரை கொண்டுள்ள முதல் நாடு என்ற சிறப்பை அந்நாடு பெற்றுள்ளது.

பிரிட்டன் அரச குடும்பத்துக்கு வின்சர் என்ற பெயர் எப்படி வந்தது?

இங்கிலாந்தில் உள்ள வின்சர் கோட்டைக்கு ஹவுஸ் ஆப் வின்சன் என பெயரிடப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதன் பின்னணி என்ன தெரியுமா.. 1917 இல் தான் ஹவுஸ் ஆப் வின்சர் உருவானது. அதன் சாக்ஸ்-கோபர்க்-கோதெ என்ற ஜெர்மானிய சாயல் கொண்ட அந்த வரலாற்றுப் பெயருக்கு மாற்றாக, ஐந்தாம் ஜார்ஜ் அரசரின் ஆணையின் மூலம் அந்த பெயர் மாற்றப்பட்டு, ஹவுஸ் ஆப் வின்சர் என்பது இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரப் பூர்வ பெயராக இடம் பெற்றது. அது தற்போதைய அரச குடும்பத்தின் பெயராகவே மாறிவிட்டது. தற்போதை ராணி ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான அரச குடும்பங்களுடன் குடும்ப உறவுகளை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த கண்டம்..

மொரீஷியஸ் தீவுக்கடியில் கண்டம் மறைந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொரீஷியஸ் தீவு கடந்த 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது மொரிஷீஸ் தீவில் சிர்கான்ஸ் எனப்படும் கனிம பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தது. 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியதாக கூறப்படும் மொரீஷியஸ் தீவில், 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ள கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொரீஷியஸ் தீவுக்கடியில் கண்டம் மறைந்ததற்கான தடயங்கள் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago