முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆபத்தை எதிர்நோக்கி...

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மயக்கவியல் துறை ஆய்வாளர்கள் 19-32 வயதுக்குட்பட்ட 2,000த்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்திய ஆய்வில், தினசரி 2 மணி நேரத்துக்கு மேல் ஒருவர் சமூக வலைதளங்களை பயன்படுதினால், அது அவருக்கு சமூகத்தில் இருந்து தனிமைப்படும் உணர்வை அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம்.

வைட்டமின் டி

நமது உடலில் வைட்டமின் டி குறைந்தால் மனஅழுத்தம், உடல் பருமன் முதுகுவலி , மூச்சிரைப்பு , உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே வைட்டமின் டி உள்ள உணவு பொருட்களான மீன் வகைகள், இறைச்சி, பால் மற்றும் பால் பொருட்கள் தானிய வகைகள் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு போன்றவை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.

வேகம் தேவை

இந்தியா, பணமில்லா பரிமாற்றத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் டிஜிட்டல் பரிமாற்றத்திற்குத் தேவையான இணைய சேவையில் போதிய வேகம் இல்லை. உலக அளவில் இணையதளத்திற்கான வேகத்தில் இந்தியா, 96- வது இடத்தில் உள்ளது.இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் இந்த வேகத்தில் இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளன. இலங்கை, சீனா, தென் கொரியா, இந்தோனேஷியா, மலேசியா உட்பட பல நாடுகள் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவை விட பலமடங்கு முன்னிலையில் உள்ளன. இணைய வேகத்தில் இந்தியா டவுன்லோட் சேவையில் 96- வது இடத்திலும், பேண்ட்வித் சேவையில் 105- வது இடத்திலும் உள்ளது.

புதிய தொழில்நுட்பம்

ஜெர்மனியை சேர்ந்த கார் தயாரிக்கும் நிறுவனமான வோக்ஸ்வாகன் ஸ்டேரிங் மற்றும் சாவி இல்லாமல் முழுவதுமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலமாக வீடியோ கேம் விளையாடும் போது காரை எப்படி ஓட்டுவோமோ அப்படியே இனி நிஜ வாழ்க்கையிலும் ஓட்ட முடியுமாம். சந்தையில் விரைவில் வரும் இந்த காரின் விலை சற்று அதிகம்

வலியின்றி தற்கொலை செய்து கொள்ள எந்திரம்

உலகிலேயே முதன்முறையாக தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்கள் வலியின்றி தற்கொலை செய்து கொள்வதற்கு ஏற்ற இயந்திரத்துக்கு ஒரு நாடு அனுமதி அளித்துள்ளது. பெரும்பாலான நாடுகளில் தற்கொலை முயற்சி என்பது சட்ட விரோதம். மேலும் இயற்கை மற்றும் கடவுளால் அளித்த உயிரை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை என்ற கருத்தும் உலகம் முழுக்க ஆழமாக வேரூன்றி உள்ளது. இதன் காரணமாகவே இன்றைக்கும் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகள் மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை மூட்டை கட்டி வீசி விட்டுள்ளன. இந்த சூழலில்தான் சுவிட்சர்லாந்து அரசு இந்த யந்திரத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு அனுமதி அளித்துள்ள 5 ஐரோப்பிய நாடு சுவிஸ் என்பது கவனிக்கத்தக்கது.தற்போது உலகம் முழுவதும் மனித உரிமை ஆர்வலர்களின் ஹாட் டாப்பிக்காக இது மாறியுள்ளது. சாக்ரோ என பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரம் தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்களை வலியின்றி சொர்க்கத்துக்கு பார்சல் செய்து விடும். இதன் மூலம் உடலுக்கு செல்லும் ஆக்சிஸன் குறைந்து, ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அளவு குறைந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மரணம் ஏற்படும் எனச் சொல்லப்படுகிறது. கேட்கவே திகிலாக இருக்கும் இந்த எந்திரத்துக்கு அனுமதி அளித்த சுவிஸ் அரசுக்கு எதிராக ஒருபுறம் கண்டனங்களும் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தொழில்நுட்பம்

மனித மூளையுடன் கம்ப்யூட்டர்களை இணைத்து செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை மேம்படுத்த நியூராலின்க் எனும் புதிய நிறுவனத்தை ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் சி.ஈ.ஒ எலான் மஸ்க் தொடங்கவுள்ளார். இதன்மூலம் மனிதர்களின் நினைவாற்றலை அதிகரித்து, கம்ப்யூட்டர் சாதனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள செய்ய முடியுமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago