அண்டசராசரத்தில் சுமார் 100 கருந்துளைகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் சூரியனை விட பல மடங்கு பெரியதாக உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நட்சத்திரத்தின் ஆயுட்காலம் நிறைவடையும்போது அது தன்னை தானே வெடித்துக்கொள்ளும். இந்நிகழ்வு ’சூப்பர் நோவா’ என அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வின்போது ஏற்படும் வெற்றிடமே கருந்துளைகள் என கூறப்படுகிறது. ஜப்பானில் உள்ள கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் அண்டத்தில் ராட்சத கருந்துளை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கருந்துளையானது நமது சூரியனை விட ஒரு லட்சம் மடங்கு பெரியதாகும். சாஜிட்டரியஸ் ஏ எனப் பெயரிடப்பட்ட இந்த கருந்துளை சூரியனை விட 400 மில்லியன் மடங்கு பெரியதாம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
முதன்முதலாக ப்ரீமியம் டெலிவிஷனில் கால் பதிக்கும் ஃபேஸ்புக், 24 சொந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது. அதிக நேரம் கொண்ட நிகழ்ச்சி மற்றும் குறைந்த நிமிடங்கள் கொண்ட நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்பட உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டவுடன், ஃபேஸ்புக் ஆப்-பின் வீடியோ டேப்பிலும் காணக்கிடைக்கும். ஃபேஸ்புக் டிவி, ஜூன் மாதம் முதல் செயல்படும்.
தூக்கம் வராமல் தவிப்போருக்கு தீர்வாக இப்போது ரோபோ தலையணை வந்துள்ளது. சோம்நாக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, மூச்சுவிடுவதை சீராகக் கண்காணித்து, தூக்கத்தை சீராக்குகிறது. மேலும் இது சுவாசத்தைக் கட்டுப்படுத்தி அமைதியான, ஆழமான தூக்கம் வர செய்யும். பாதியில் எழுந்தால்கூட இந்த தலையணை தாலாட்டுப் பாடி தூங்க வைக்கிறதுதான் ஆச்சரியம்.
திருப்பதியில் தர்ம தரிசனம் தொடங்கி பல்வேறு தரிசன கட்டணங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலகிலேயே அதிக வருவாய் கொண்ட கோயிலாகவும், அதிக பக்தர்கள் தரிசனம் செய்யும் கோயிலாகவும் திருப்பதி விளங்கி வருகிறது. அண்மையில் திருப்பதி தேவஸ்தானம் புதிய கட்டண அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி நாள் முழுவதும் உதய-அஸ்தமன சேவையை தரிசனம் செய்ய ரூ.1.50 கோடி கட்டணம். அதாவது வெள்ளிக்கிழமைகளில் இந்த கட்டணமும், மற்ற நாட்களுக்கு ரூ.1 கோடியும் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் மூலம் நாள் முழுவதும் உதய சேவை தோடங்கி அஸ்தமன சேவை மற்றும் இரவு கோயில் நடை சாத்தும் வரையில் அனைத்து வழிபாடுகளையும் பக்தர்கள் தரிசிக்க இந்த கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் அபிஷேகம் நடைபெறும் என்பதால் ரூ.1.50 கோடி. இந்த வசதியை பக்தர்கள் 25 ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது ஒருமுறை கட்டணம் செலுத்தி விட்டு ஏதேனும் ஒரு நாளை தேர்வு செய்து கொண்டால், 25 ஆண்டுகளுக்கும் அந்த நாளின் முழு சேவை வழிபாட்டையும் பக்தர்கள் தரிசிக்கலாம் என்பது கோயில் நிர்வாகத்தின் ஏற்பாடு. இதற்காக முதல் கட்டமாக ஆன் லைனில் 531 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இன்று உலகம் முழுவதும் நவீன பேஷன் விரும்பிகளை ஆட்டி படைத்துவரும் பொருள்களில் முதன்மையானது தலை கேசத்துக்கு பயன்படும் ஷாம்பூ. இது முதன்முதலில் எந்த நாட்டில் பயன்படுத்தப்பட்டது தெரியுமா.. இந்தியாவில்தான். பண்டைய இந்தியாவில் மக்கள் நெல்லிக்காய், பூந்திகொட்டை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளை பயன்படுத்தி தங்களது கேசத்தை பராமரித்து வந்தனர். இந்த வகை பயன்பாடு இன்றும் இந்தியா முழுவதும் பரவலாக மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இதுதான் பின்னர் வணிக ரீதியாக வெளநாடுகளுக்கு சென்று ஷாம்பூவாக மீண்டும் இந்தியாவுக்குள் வந்துள்ளது. ஷாம்பூ என்ற வார்த்தையே இந்திய வார்த்தையான சாம்போ என்பதில் இருந்து தோன்றியதாகும் என்றால் ஆச்சரியம் தானே..
குஜராத் மாநிலம் கிர் காட்டில் வசித்து வருபவர் மகந்த பரத்தாஸ் தர்சன்தாஸ். இவர் ஒட்டு போட்டதாலேயே நாடு முழுவதும் கவனம் பெற்றார். அப்படி என்ன விசேசம் என்கிறீர்களா.. கிர் காட்டில் இவர் வசிக்கும் பகுதியில் இவர் மட்டுமே தனித்து வசித்து வருகிறார். இவர் வாக்களிப்பதற்காக கடந்த 2004 ஆம் ஆண்டு இவர் வசிக்கும் பகுதியில் ஒரே ஒரு ஓட்டுக்காக மட்டும் வாக்கு சாவடி அமைக்கப்பட்டது. அதன் மூலம் இவர் உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். தற்போது 2019 வரை இவர் ஒருவருக்காக மட்டுமே ஆளரவமற்ற கிர் வனப்பகுதியில் வாக்கு சாவடி மையம் அமைக்கப்படடது என்றால் ஆச்சரியம் தானே..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


