முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வரலாற்றில் 7 ஆண்டுகள் பின்தங்கிய எத்தியோப்பியா

இதென்ன புதுசாக இருக்கே என்று யோசிக்கிறீர்களா... ஒவ்வொரு நாட்டுக்கும், கலாச்சார மக்களுக்கும் பல்வேறு வகையான கால கணக்கு அதாவது காலண்டர், நம்மூர் பாஷையில் சொன்னால் பஞ்சாங்கம் உள்ளது. அதன் படி எத்தியோப்பியாவின் காலண்டரில் 13 மாதங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதத்துக்கும் 30 நாட்கள். கடைசி மாதமான பகுமே என்ற மாதத்தில் மட்டும் 5 நாட்கள். இதனால் இவர்கள் எப்போதும் மற்ற நாடுகளின் காலத்துடன் ஒப்பிடும் போது 7 ஆண்டுகள் பின்தங்கியே உள்ளனர். அவர்கள் தங்கள் புத்தாண்டு தொடக்கத்தை செப்டம்பர் 11 ஆம் தேதிதான் கொண்டாடுகின்றனர். புதிய நூற்றாண்டு தொடக்கத்தை அவர்கள் 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 இல்தான் கொண்டாடினர் என்றால் ஆச்சரியம் தானே

வாட்ஸ் அப் அப்டேட்

பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்களை வழங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் இந்த வசதியினை பயன்படுத்தி கொள்ளலாம். பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ காலிங் என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர் வீடியோ கால் மேற்கொள்ளும் போதே மற்றவர்களுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் செய்யும் புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வீடியோ கால் பேசிக்கொண்டிருக்கும் போது வீடியோ கால் திரையை சிறிதாக்கி மற்றவர்களுக்கு மெசேஜ் செய்ய முடியும். முன்னதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை வீடியோ மற்றும் புகைப்படமாக பதிவேற்றம் செய்யும் வசதியை கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது. தற்போது அந்த ஸ்டேட்டஸ்களில் டெக்ஸ்ட் செய்து பகிர்ந்து கொள்ளும் புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறு மூளையுடைய மனிதன்

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள 2 இடங்களிலிருந்து சிறு மூளையுடைய மனித இனத்தின் படிமங்களை அகழ்வராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.  இந்த இனம் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்துள்ளது தெரிய வருகிறது. இந்தச் சிறு மூளையுடைய மனித இனம் 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டன என்று அறிவியலர் நம்பி வந்தனர். ஆனால் இந்தக் குறிப்பிட்ட மனித இனம் 2,36,000 ஆண்டுகளுக்கும் 3,35,000 ஆண்டுகளுக்கும் இடையே வாழ்ந்து வந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. மனிதர்களின் நெருங்கிய சகாக்களான சிம்பன்ஸிக்கள், கொரில்லாக்களுக்கு இந்த மனித இனம் அதிக நெருக்கமுடையது. மேலும் இந்த சிறுமூளையுடைய மனித இனம் இறந்தோரை புதைக்கும் வழக்கம் உடையதாக இருந்துள்ளதும் அறிவியலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கூகுல் ஆப்

புதிய முறையில் புகைப்படம் எடுக்க ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்காக கூகுல் புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப் மூலம் நகரக்கூடிய புகைப்படங்களை எடுக்க முடியும். இந்த ஆப் மூலம் நகரும் புகைப்படத்தை ஜிஃப் ஃபைல் மற்றும் அனிமேடட் புகைப்படங்களை எடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

சந்திரனிலும் நிலநடுக்கம் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?

சந்திரனிலும் நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? நம்முடைய பூமியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நமக்கு தெரியும். இதனால் அடிக்கடி ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படும். நம்முடைய பூமியைப் போலவே சந்திரனிலும் நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. 1969 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சந்திரனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அப்பல்லோ விண்வெளி வீரர்கள் அவர்கள் ஆய்வு செய்யும் இடங்களை சுற்றி நில அதிர்வு அளவீடுகளை நிறுவினார்கள். இந்த ஆய்வில் சந்திரனில் நிலநடுக்கம் இருபதிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்திற்குள் ரிக்டர் அளவில் 5.5 வரை பதிவானது. சந்திரனில் 700 கிலோ மீட்டர் வரைக்கும் ஆழத்தில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிய கேமரா

கூகுள் க்ளிப்ஸ் என்ற தானியங்கி கேமராவில் உள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்டவற்றின் முகங்களை அடையாளம் காண முடியும். இந்த ஸ்மார்ட் கேமரா தான் இருக்கும் இடத்திலேயே எந்த விதமான மனித தலையீடும் இல்லாமல் புகைப்படங்களை எடுக்குமாம். இது 130 டிகிரி கோணத்தில் உள்ளவற்றை புகைப்படம் எடுக்கும் ஆற்றல் கொண்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago