Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கல்லால் செய்யப்பட்ட பழம்பெரும் நாதஸ்வர கருவி

தமிழர்களின் பழம்பெரும் இசைக்கருவிகளுல் ஒன்று நாதஸ்வரம். அனைத்து மங்கல நிகழ்ச்சிகளிலும் தவறாம் இடம் பெறக் கூடியதாகும். இது பொதுவாக ஆச்சா என்ற மரத்தில்தான் செய்யப்படுகிறது. ஆனால் கல்லால் செய்யப்பட்ட நாதஸ்வரம் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அதில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல் நாதஸ்வரம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திலுள்ளது.மற்றொரு கல் நாதஸ்வரம்:  தூத்துக்குடி மாவட்டம் நவ திருப்பதிகளில் ஒன்றான  ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோயிலிலும் ஒரு கல் நாதஸ்வரம் உண்டு. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் அரசாண்ட கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற மன்னரால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட   இந்த கல் நாதஸ்வரம். இப்போது வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே பாதுகாக்கபட்டு வருகிறது.

புதையல் புதிது

சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியானிங் மாகாணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய புராதனப்பொருட்களை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். கிறிஸ்து பிறப்பதற்கு முன், சீன ஹன் மன்னராட்சியின் வெண்கல காலத்தினை சேர்ந்த பானைகள், பாத்திரங்கள், இரும்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் மூழ்கியும் அணையாமல் தீபம் எரியும் கோயில்

நாமக்கல் மாவட்டம்  மோகனூர். இங்கே, ஊருக்குள், காவிரிக் கரையோரத்தில் உள்ளது ஸ்ரீஅசலதீபேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் அப்படி என்ன சிறப்பு. எத்தனையோ உள்ளன. பாடல் பெற்ற தலம். திருக்கார்த்திகை தீபத் திருவிழா இங்கே விமரிசையாக கொண்டாடப்படுகிறது. காசிக்கு நிகரான தலம், திருவண்ணாமலைக்கு நிகரான தலம் எனப் போற்றப்படுகிறது. சுவாமி முன் உள்ள தீபம் ஆடாமல் அசையாமல் எரிவதாலேயே அவருக்கு அசலதீபேஸ்வரர் என்ற பெயர் வந்தது. ஒரு முறை காவிரியில் வெள்ளம் வந்து கோயில் மூழ்கிய போதும் தீபம் மட்டும் விடாமல் எரிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுவது இதன் கூடுதல் சிறப்பு.

கற்கால ஓவியங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள பாக்கம் மலைத்தொடர் ஒட்டிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது செத்தவரை மலையில் ஆவணம் செய்யப்படாத புதிய பாறை ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர்.செத்தவரை ஊரின் தெற்கு மூலையில் செத்தவரை மலைகள் தொடங்கும் இடத்தில் கும்பசுனை என்ற இடத்தில் உள்ள பெரிய பாறையில் இரண்டு இடங்களில் செஞ்சாந்து ஓவியங்கள் மற்றும் இதனருகே உள்ள பாறையில் வெண்சாந்து ஓவியமும் இருப்பது கண்டறியப்பட்டது. ஓவியத்தில் மான் ஒன்றும் அதன் அருகே யானை போன்ற ஒரு உருவம் காணப்படுகிறது. மற்றொரு முனையில் உள்ள செஞ்சாந்து ஓவியத்தில் இரு மனிதர்கள் மட்டும் உள்ளனர். மேலும் அருகில் உள்ள மற்றொரு குன்றிலும் ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவையாவும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஓவியங்களாகக் கருதலாம். இதன் காலம் சுமார் 5000 வருடங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

சிறுநீரகத்தை பாதுகாக்க

இரண்டு டீஸ் பூன் மல்லி விதைகளை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து மறு நாள் காலை அதனை வடிகட்டி குடிக்க சிறுநீரில்  உள்ள  பாதிக்கப்பட்ட செல்கள் அழியும். வெள்ளக்கரிக்காய் ஜூஸை தினமும் இருவேளை குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீரில் வெளியேறி, உடலை  குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

மிகப்பெரிய தடம்

ஜூராசிக் பார்க் என்றழைக்கப்படும் வடக்கு ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பிரைஸ் பாயிண்ட் என்ற இடத்தில் சுமார் 5 அடி 9 அங்குல உயரம் கொண்ட உலகின் மிகப்பெரிய டைனோசர் காலடித் தடங்கள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை 127 முதல் 140 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாம். இதுவரை, 21 வகையான டைனோசர் காலடித் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago