முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மைக்ரோசிப்

அமெரிக்காவில் ஒரு நிறுவனம் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உடலில் ஒரு ஊழியருக்கு 300 டாலர் செலவு செய்து மைக்ரோ சிப்களை பொருத்தியுள்ளது. இந்த சிப் அக்சஸ் கார்டு போன்று செயல்படுகிறது. அதாவது அலுவலகம் வரும்போது கதவுகளை திறப்பது, பன்ச் செய்வது, அவர்களுக்கான கணினியை பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு பயன்படுகிறது.

மாதுளை நன்மை

இதயத்திற்கு வலுசேர்க்கும் மாதுளை எளிதில் ஜீரணமாகும் பழம். இதன் தோல், இலை, பூ, காய், வேர், விதை போன்ற அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. உடலில் ஏற்படும் சோர்வு நீங்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஈரலின் செயல்பாட்டிற்கும் ஏற்றதாக இது இருக்கிறது. ஈரலில் வைட்டமின் ஏ-யை சேகரிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.

பொழிவுக்கு பூண்டு

ஒரு பல் பூண்டை மசித்து எடுத்து பின், அத்துடன் ஒரு டீ ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் க்ளே பவுடர் சேர்த்து செய்த பேஸ்டை முகத்தை நன்கு சுத்தம் செய்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ சுருக்கம் மறைந்து முகம் இளமையாக காட்சியளிக்கும்.

பெட்ரோல் தரமானதா?

ஒரு வடிகட்டும் காகிதத்தில் சில துளிகள் பெட்ரோலை ஊற்றினால், சிறிது நேரத்தில் முழுதும் ஆவியானால் குட். இல்லையென்றால் கலப்படம். தெர்மாமீட்டரை பெட்ரோலில் வைத்து பார்த்தால், வெப்பநிலை குறைவாக காண்பித்தால், மண்ணெண்ணை கலப்பட பெட்ரோல். காப்பர் வலையில் பெட்ரோலை ஊற்றி எரிக்கும் போது கரிய புகை வந்தால் கலப்படம். என்ன ஓகேவா..

ரயிலை தூக்கிச்செல்லும் விமானம் எதிர்காலத்தில் எதுவும் சாத்தியம்

பயண நேரம் மிச்சமாகும் ரயிலைத் தூக்கிச் செல்லும் விமானம். கேட்பதற்கு ஆச்சர்யமாகத் தோன்றும் இந்த யோசனை வருங்காலத்தில் உண்மையாகப் போகிறது. ஈ பி எஃப் எல் (EPFL) என்ற ஸ்விட்சர்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கான மாதிரியை உருவாக்கியுள்ளனர். இதன் பெயர் க்ளிப் ஏர் (CLIP AIR), இதன்படி, ரயில்பாதையில் சென்று கொண்டிருக்கும் ரயில் பெட்டிகளை பறந்து செல்லும் விமானம், தூக்கிச் சென்று சேர்க்க வேண்டிய இடத்துக்குக் கொண்டு செல்லும்.  ஒரு நேரத்தில் 3 பெட்டிகளை இந்த விமானத்தால் கொண்டு செல்ல முடியும். பயணிகள், சரக்குகள், கச்சா எண்ணெய் போன்றவற்றை இந்த விமானங்கள் எடுத்துச் செல்லும். இந்த விமான மாதிரியின் மூலம் ரயில், தரை மற்றும் வான்வழிப் போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் முறை சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற விமானங்களுக்காக இப்போது ஏர்போர்ட் (Airport) இருப்பதைப் போன்று வருங்காலத்தில் ஸ்கை ஸ்டேஷன்ஸ் (Skystations) என்பவை அமைக்கப்படும்.

வேகத்தில் சரிந்த ஜியோ

கிரிடெட் "சூசி" என்ற தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் இலவச சலுகையுடன் ஜியோ 4ஜி சேவை தொடங்கினாலும், நாட்கள் செல்ல செல்ல வேகம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் அதிக அளவில் இதில் சேர்ந்ததே வேகம் குறைந்ததற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இருப்பினும் வேகம் குறைந்தாலும் நாட்டில் இப்போதும் பலர் ஜியோவை நாடி ஓடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony