முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ரூ.500 கோடிக்கு விற்பனையான டிஜிட்டல் ஓவியம்

அமெரிக்காவைச் சேர்ந்த டிஜிட்டல் ஆர்ட்டிஸ்டான Mike Winkelmann முழுக்க முழுக்க கணிணி மூலம் வரைந்த டிஜிட்டல் ஓவியம் முதன் முறையாக அதிகபட்ச விலைக்கு 69.3 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 500 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இது வரை கைகளால் வரையப்பட்ட ஓவியம் தான் அதிக விற்பனையாகி வந்த நிலையில இவரது டிஜிட்டல் ஓவியம் அந்த சாதனையை படைத்துள்ளது. இனி வரும் காலத்தில் டிஜிட்டல் ஓவியங்கள் புதிய சந்தையை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம்

ஆல்கஹால் பயன்

மதுவில் உள்ள ஆல்கஹால் மனிதர்களின் நினைவாற்றலை அதிகரிக்கிறதாம். இங்கிலாந்தில் இதுதொடர்பாக, 88 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அதிக அளவு மது குடித்தவர்களை விட சிறிதளவு மது குடித்தவர்களுக்கு நினைவாற்றல் சக்தி அதிகரித்திருந்தது. மேலும் அதிக அளவு மது குடித்தவர்களின் உடல் நலம், மனநலம் மற்றும் நினைவாற்றல் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

மிகப்பெரிய தடம்

ஜூராசிக் பார்க் என்றழைக்கப்படும் வடக்கு ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பிரைஸ் பாயிண்ட் என்ற இடத்தில் சுமார் 5 அடி 9 அங்குல உயரம் கொண்ட உலகின் மிகப்பெரிய டைனோசர் காலடித் தடங்கள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை 127 முதல் 140 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாம். இதுவரை, 21 வகையான டைனோசர் காலடித் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

முதியவர்களுக்காக மட்டும்...

ஜப்பான் நாட்டை சார்ந்த 81 வது பாட்டி மசாக்கோ வகாமியா, வயது முதிர்ந்தவர்களுக்கான ஐபோன் செயலியை ஓன்றை வடிவமைத்துள்ளார். இந்த ஆப் முதியவர்கள் விளையாடும் மாதிரியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஹினாடன் என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த ஆப் ஜப்பான் நாட்டின் பாரம்பரிய பொம்மை திருவிழாவான ஹினமட்சுரி என்ற திருவிழாவை அடிப்படையாக கொண்டது. இதில் குறிப்பிட்ட ஆடையணிந்த பொம்மைகளை ஹினமட்சுரி திருவிழாவில் வைக்கப்படும் வரிசையில் நிரப்பினால் வெற்றியடைவீர்கள். இந்த ஆப்பை உருவாக்கிய இவர், ஓய்வு பெற்ற வங்கியாளர். மேலும் தனது 60வது வயதில் கணினி பயிற்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

'மொய் டெக்'

செல்போன் செயலியின் மூலமாக மொய் செய்பவரின் விவரங்களை எழுதிக்கொள்ள புது செயலியை உருவாக்கியுள்ளனர் உசிலம்பட்டிப் பெண்கள்.  'மொய் டெக்' எனும் இந்த செயலி வியக்க வைத்துள்ளது. மேலும் விழாக்களுக்கு வந்து மொய் எழுதும் மக்களுக்கு அவர்கள் மொய் செய்தமைக்கான ரசீது மற்றும் அவர்களது அலைப்பேசிக்கு குறுந்தகவல் என அசத்துகின்றனர்.

திப்பு சுல்தான் ஓவியம் ரூ.6.32 கோடிக்கு விற்பனை

இந்திய சுதந்திர போரின் போது மைசூர் சமஸ்தானத்து மன்னர்களான ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் படைகள் 1780 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் படைகளை ஓட ஓட விரட்டியடித்தனர். பொள்ளிலூர் என்ற இடத்தில் இந்த சண்டை நடைபெற்றது. இந்த வெற்றியை குறிப்பிடும் வகையில் பொள்ளிலூர் சண்டை என்ற தலைப்பில் சுமார் 32 அடி நீளமுள்ள 10 மிகப் பெரிய காகிதங்களில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் ஓவியமாக தீட்டப்பட்டது. இந்த ஓவியம் லண்டனில் புதன் கிழமை ஏலத்துக்கு வந்தது. அப்போது 630000 பவுன்ட்ஸ் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6.32 கோடிக்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago