முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செயலிகள் எச்சரிக்கை

ஆண்ட்ராய்டு செயலிகள் உள்ள மொபைல் போன்கள் மூலம் ஒருவரின் இருப்பிடம் மற்றும் பயணிக்கும் இடங்கள் ஆகியவற்றை உளவு பார்க்க முடியும் என அமெரிக்காவின் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். எனவே ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யும் முன் எச்சரிக்கையாக செயல்பட அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தீப்பெட்டிக்கு முன்பாகவே லைட்டர் வந்து விட்டது தெரியுமா?

அறிவியல் எப்போதும் சிக்கலான கால வரிசையை கொண்டிருக்கும். எது எப்போது வெளிப்படும் என்பதை மனிதனால் யூகிக்க முடியாது. அதே போல தான் மிகவும் எளிமையான தீக்குச்சி தீப்பெட்டி போன்றவை கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே லைட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. அதான்ங்க... சிகரெட்களை பற்ற வைக்க நாம் பயன்படுத்துகிறோமே அந்த குட்டி சாதனம்தான்... 1816 இல் ஜெர்மனி வேதியியலாளர் ஜோகன் வுல்ப்காங் என்பவர் லைட்டரை கண்டு பிடித்து விட்டார்.  அதற்கு பின்னர் சில ஆண்டுகள் கழித்து 1827 இல் தான் தீப்பெட்டியும் தீக்குச்சியையும் பிரிட்டனை சேர்ந்த வேதியியலாளர் ஜான் வாக்கர் என்பவர் சல்பைடு, பொட்டாசியம் குளோரேட், பசை, ஸ்டார்ச் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கிறார். தொடக்கத்தில் தனது கண்டுபிடிப்புக்கு காங்கிரேவ்ஸ் என்று பெயரிட்டார். பின்னர்தான் அவை மேட்ச் தீப்பெட்டி, தீக்குச்சி என்ற பெயரை பெற்றன என்றால் ஆச்சரியம் தானே..

மேலும் வசதி

விபத்தை தவிர்க்கும் வகையில், தானாக இயங்கக்கூடிய ஸ்கூட்டரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். ஒரு நபர் மட்டுமே பயணிக்கக் கூடிய இந்த ஸ்கூட்டரில் நான்கு சக்கரம் உள்ளது.இதன் எடை 50 கிலோ ஆகும். அதிகபட்சமாக மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ஸ்கூட்டர் பயணிக்கும் போது இடையூறுகள் வந்தால் அதனை கண்டறிவதற்காக இதில் சென்சார்ஸ் பொருத்தப்பட்டுள்ளன.

பார்வை பத்திரம்

நாம் ஸ்மார்ட் போனில் அதிக நேரம் செலவிடும்போது நமது கண்களில் உள்ள நீர் வேகமாக ஆவியாகி கண்கள் உலர்கிறது. இதனால், கண்களில் தண்ணீர் உற்பத்தி தடைபட்டு உலர் கண் நோய்கள், கண் வீக்கம் மற்றும் கண் எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன. இது தொடர்ந்தால் கண் பார்வை முற்றிலும் பறிபோகுமாம்.

ஒலியை விட இருமடங்கு வேகம் கொண்ட வர்த்தக விமானங்கள்

அமெரிக்காவில் கடந்த 1976 முதல் 2003 வரை பயன்பாட்டில் இருந்த வர்த்தக விமானங்கள் ஒலியை விட இருமடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவை. உதாரணமாக நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு வெறும் 2 மணி 52 நிமிடத்தில் பறந்து செல்லும் திறன் மிக்கவையாக இருந்தன. ஆனால் இவை அதிக  விபத்துகளை சந்தித்ததுடன், விபத்தில் பயணிகள் அனைவரும் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்த விமானங்களை பயன்படுத்திக் கொள்வது நிறுத்திக் கொள்ளப்பட்டன.

இருளில் ஒளிரும் மனித உடல்

இருளில் மனித உடல் ஒளிரும் என்பது உங்களுக்கு தெரியுமா.. ஒரு நாளில் மிக குறைந்த அளவிலோ, மிக அதிகமாகவோ உடல் ஒளிர்கிறது. ஆனால் அதை நாம் வெறும் கண்ணால் பார்க்க இயலாது. அது வெளியிடும் ஒளியின் அளவானது நமது கண்கள் உணரும் திறனை விட 1000 மடங்கு குறைவானதாகும். ஆனால் இந்த ஒளியானது அகச்சிவப்பு கதிர்களிலிருந்து மாறுபட்டது. அது உடலின் வெப்பத்திலிருந்து வெளிப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு ஒளி உமிழும் உடலின் திறனானது காலை 10 மணி அளவில் மிக குறைவாகவும், மாலை 4 மணி அளவில் உச்சத்திலும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. முற்றிலும் ஒளியற்ற அரையில் ஆரோக்கியமான நபர்களை நிறுத்தி வைத்து குறைவான ஒளியில் படம் பிடிக்கும் கேமராவை கொண்டு விஞ்ஞானிகள் இதை படம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony