முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மிகப்பெரிய தடம்

ஜூராசிக் பார்க் என்றழைக்கப்படும் வடக்கு ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பிரைஸ் பாயிண்ட் என்ற இடத்தில் சுமார் 5 அடி 9 அங்குல உயரம் கொண்ட உலகின் மிகப்பெரிய டைனோசர் காலடித் தடங்கள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை 127 முதல் 140 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாம். இதுவரை, 21 வகையான டைனோசர் காலடித் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

காகித பாட்டில், Paper bottle

1907  ஓர் விஞ்ஞான அதிசயம் நடந்தது. அதுதான் லியோ பேக்லேண்ட் என்பவர் பாலிமர் பேக்லைட் எனப்படும் பிளாஸ்டிக்கை கண்டறிந்த ஆண்டு. அதன் பிறகு அணு ஆயுதத்தை விட உலகையே அச்சுறுத்தும் ஒரு நச்சாக மாறும் என அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கு உலகின் முக்கிய தேவை பிளாஸ்டிக்குக்கு ஒரு உடனடி மாற்று. இந்த சூழலில் நொய்டாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கண்டறிந்ததுதான் காகித பாட்டில். சுக்ஸி பாட்டில் மற்றும் மக்கும் கழிவுகளை கொண்டு இவற்றை 2 ஆண்டு ஆய்வுக்கு பின் வடிவமைத்துள்ளனர். எளிதில் மக்கக் கூடியதாகவும், கசிவுத்தன்மை அற்றதாகவும் இவை உள்ளதாக கூறப்படுகிறது. அப்பாடா எப்படியோ பிளாஸ்டிக்கிலிருந்து தப்பினால் போதும் என்கிறீர்களா.. அதுவும் சரிதான்.

புதிய தொழில்நுட்பம்

மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை சார்ஜ் செய்துகொள்ள, இஸ்ரேலைச் சேர்ந்த ’எலெக்ட்ரோட்’ (Electroad) எனும் நிறுவனம் புதிய தீர்வை முன்வைத்துள்ளது.எலெக்ட்ரிக் கார்கள் பயணிக்கும் போது ஒயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் உதவியுடன் சாலைகள் மூலம் சார்ஜ் செய்யும் முறை குறித்து அந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது

உலகிலேயே சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நாடு எது தெரியுமா?

உலகிலேயே சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நாடு எது தெரியுமா..உலகிலேயே அழகிய நாடு என வர்ணிக்கப்படும் பிரான்ஸ்தான் அது. ஐநாவின் சுற்றுலா கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 2017 இல் ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்ஸ் நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 86.9 மில்லியன். இதற்கு அடுத்தபடியாக அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்த நாடு ஸ்பெயின். அங்கு விசிட் அடித்தவர்கள் எண்ணிக்கை 81.8 மில்லியன். அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றவர்கள் 76.9 மில்லியன், சீனா-60.7 மில்லியன்,இத்தாலி - 58.3 மில்லியன் என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

உலகிலேயே அதிக விலைக்கு விற்ற புத்தகம் எது தெரியுமா?

இன்றைக்கு புத்தக கண்காட்சிக்கு போனால் புத்தக விலைகளை கேட்டால் மயங்கி விழாத குறையாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு விலைகள் தாறுமாறாக எகிறிவிட்டன. இதில் பதிப்பாளர்களை குற்றம் சொல்லியும் பயன்இல்லை. புத்தகத்துக்கு தேவையான காகித விலை, மை, அச்சடிக்கும் செலவு எல்லாம் அதிகரிக்கும் போது புத்தக விலையும் கூடத்தானே செய்யும். அது கிடக்கட்டும். உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையான புத்தகம் எது தெரியுமா... லியோனார்டோ டாவின்சியால் எழுதப்பட்ட கோடெக்ஸ் லெயிஸ்டர் என்ற புத்தகம்தான் உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையானது. அந்த புத்தகத்தை வாங்கியவர் மைக்ரோ சாப்ட் அதிபர் பில்கேட்ஸ். விலை எவ்வளவு தெரியுமா 30.8 மில்லியன் டாலர். அவர் அந்த பணத்தை வெறும் 1 மணி நேரத்தில் ஈட்டி விடுவார் என்றால் அது அதை விட சுவாரசியம் தானே.

அகத்தியர் அருவி

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள அருவி அகத்தியர் அருவி. சுமார் 25 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவியில் ஆண்டு முழுமைக்கும் தண்ணீர் வருவதால், இது வற்றாத ஜீவநதி என்னும் பெயரை பெறுகிறது. இதிலிருந்து உருவாவதுதான் தாமிரபரணி நதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago