முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கேரட்டின் உண்மையான நிறம் என்ன தெரியுமா?

இன்றைக்கு அநேகமாக நமது தினசரி உணவில் இடம் பெறும் காய்கறி வகைகளில் கேரட் முக்கிய இடம் வகிக்கிறது. ஆரஞ்சு நிறத்தில் பச்சையாக தின்பதற்கேற்ற சுவையுடன் இன்றைக்கு கேரட் பயிரிடப்பட்டு கிடைக்கிறது. ஆனால் அதன் அசலான நிறம் என்ன தெரியுமா... 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் கேரட்டின் நிறம் ஊதா தான். கலப்பினங்கள் வாயிலாக மஞ்சள் மற்றும் வெள்ளி நிற கேரட்டுகள் உருவாகின. ஆரஞ்சு நிற கேரட்டுகளை நெதர்லாந்து (டச்சு) விவசாயிகள் பயிரிட்டு வந்துள்ளனர். மத்திய கால கட்டத்தில் ஊதா நிற கேரட்டை கலப்பினத்தின் மூலமாக இன்றைய சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றியவர்கள் அவர்கள் தான். இவை வளர்வதற்கு எளிதாக இருப்பதாக நம்பப்படுவதால் தொடர்ந்து இந்த நிறத்திலேயே பயிரிடப்பட்டு வருகின்றன.

நீருக்குள் மூழ்கும் நகரம் எது தெரியுமா?

மெக்சிகோ நகரம் கொள்ளை, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கு பேர் போனது. தற்போது புவியியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. 1325 ஆம் ஒரு ஏரியின் மீது இந்த நகரம் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் துரதிருஷ்டம் ஆண்டு தோறும் சுமார் 3.2 அடிகள் வரை இந்த நகரம் மூழ்கிக் கொண்டிருக்கிறது. இதற்காக ஆஸ்டெக் ஆட்சியாளர்கள் ஒரு செயற்கை தீவை உருவாக்கினர். மேலும் 1521 இல் நகரம் தகர்க்கப்பட்ட போது இடிபாடுகளின் மீது ஸ்பானியர்கள் புதிய மெக்சிகோவை நிர்மாணித்தனர். ஆனால் நகர வாசிகள் தரைக்கு கீழே இருக்கும் நீரைத்தான் நம்பி இருப்பதால் கடந்த 60 ஆண்டுகளில் நீர் 32 அடிக்கும் கீழே சென்று விட்டது. இல்லாவிட்டால் நகரம் ஏரிக்குள் ஸ்வாகா ஆகியிருக்கும்.

மிரட்டும் மலசேஷ்யா

குளிர் காலத்தில் பொடுகு தொல்லை அதிகரிப்பதோடு, தலையில் மலசேஷ்யா என்ற பூஞ்சை தொற்றும் உருவாகும். முகம், மார்பு, முதுகு ஆகிய உடலின் பிற பாகங்களுக்கும் பூஞ்சைத் தொற்று பரவும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு தீர்வு வாரத்திற்கு இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

வியக்கவைக்கும் ஐஸ் மனிதர்

நெதர்லாந்தைச் சேர்ந்தவர் விம் ஹோஃப் என்ற 57 வயது நபருக்கு ‘ஐஸ் மனிதர்’ என்ற பெயரும் உண்டு. பனிக் கட்டியில் பல சாதனைகளைப் புரிந்ததால் இவருக்கு இந்த பெயர். ஜப்பான் தொலைக்காட்சி ஒன்றுக்காக ஐஸ் துகள்கள் நிறைந்த தொட்டியில் 2 மணி நேரம் அமர்ந்தும், ஆர்க்டிக் கடலில் ஐஸ்கட்டிகளுக்கு அடியில் மூச்சைப் பிடித்துக் கொண்டு நீச்சல் அடித்தும், பின்லாந்தில், பனி நிறைந்த சாலையில் வெறுங்காலில் மராத்தான் ஓடியும் சாதனை படைத்திருக்கிறார். இவ்வாறு பல சாதனைகளை புரிந்து 3 முறை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். மேலும் 26 சாதனைகளுக்கு சொந்தக்காரர் இவர்.

பிரிட்டன் ராணி எலிசபெத்தை விட பணக்கார இந்திய பெண்

இந்தியாவின் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளும் பிரிட்டன் நிதி அமைச்சர் ரி‌ஷி சுனக்கின் மனைவியுமான அக்சதா மூர்த்தி இங்கிலாந்து ராணி எலிசபெத்தைவிட பணக்காரராக திகழ்கிறார். ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ஏறத்தாழ 460 மில்லியன் அமெரிக்க டாலர். தனது தந்தை நாராயணமூர்த்தி தொடங்கிய தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸில் 42 வயதான அக்சதா மூர்த்தியின் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர். இதைத் தவிர, லண்டனின் கென்சிங்டனில் உள்ள 9 மில்லியன் டாலர் மதிப்புடைய வீடு, கலிஃபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் உள்ள ஒரு பிளாட் உட்பட குறைந்தது நான்கு சொத்துகளை வைத்துள்ளார்.

100 மடங்கு வேகம்

தற்போதைய வைஃபை இணைய இணைப்பை விட நூறு மடங்கு வேகமான இணைப்பை வழங்கும் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விநாடிக்கு 40 ஜிபிக்கும் அதிகமான வேகத்துடன் இணைய இணைப்பினைப் பெற முடியுமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago