முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சிறு மூளையுடைய மனிதன்

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள 2 இடங்களிலிருந்து சிறு மூளையுடைய மனித இனத்தின் படிமங்களை அகழ்வராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.  இந்த இனம் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்துள்ளது தெரிய வருகிறது. இந்தச் சிறு மூளையுடைய மனித இனம் 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டன என்று அறிவியலர் நம்பி வந்தனர். ஆனால் இந்தக் குறிப்பிட்ட மனித இனம் 2,36,000 ஆண்டுகளுக்கும் 3,35,000 ஆண்டுகளுக்கும் இடையே வாழ்ந்து வந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. மனிதர்களின் நெருங்கிய சகாக்களான சிம்பன்ஸிக்கள், கொரில்லாக்களுக்கு இந்த மனித இனம் அதிக நெருக்கமுடையது. மேலும் இந்த சிறுமூளையுடைய மனித இனம் இறந்தோரை புதைக்கும் வழக்கம் உடையதாக இருந்துள்ளதும் அறிவியலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வாடகைக்கு ரோபோ

ஜப்பானில் ஒரிக்ஸ் ரென்டெக் கார்ப்ரேஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ள யுமி எனப்படும் மனித ரோபோவை வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை, வீட்டு வேலை போன்றவற்றிற்கு வாடகைக்கு எடுத்து வருகின்றனர். மனிதர்களுக்கு தரும் சம்பளத்தை விட ரோபோக்களுக்கு தரும் விலை சற்று குறைவு என்பதால் தானாம்.

ஹேர்கட்டில் அசத்தலான உருவங்கள் பஞ்சாப் சகோதர்கள் அசத்தல்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். அதே போல கலைக் கண்ணோடு பார்த்தால் எந்த பொருளையும் தங்களுடைய படைப்பாற்றலால் மேஜிக் போல மாற்றி விடும் வித்தை படைத்தவர்கள் படைப்பாளிகள். அப்படித்தான் பஞ்சாபில் உள்ள சிகை திருத்தும் கலைஞர்கள் தனது அசத்தலான முடி வெட்டுதல் மூலம் சிறப்பான உருவங்களை உருவாக்கி அசத்துகின்றனர். அவர்களது கைவண்ணத்தில் வாடிக்கையாளர்களின் தலையே கேன்வாசாக, தலையில் மைக்கேல் ஜாக்சன், மிக்கி மவுஸ் என விதவிதமான உருவங்கள் ஜொலிக்கின்றன. பஞ்சாபில் உள்ள சிகை திருத்தும் தொழில் செய்து வரும் சகோதரர்களான Dabwali என்ற பகுதியைச் சேர்ந்த Rajwinder Singh Sidhu மற்றும் Gurwinder Singh Sidhu ஆகியோர்தான் இந்த சாதனையை படைத்து வருகின்றனர். வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு உருவங்களை ஹேர்கட் மூலம் செய்து தருகிறோம் என்கின்றனர் ஸ்டைலாக அவர்கள் தங்களது கேசத்தை ஒதுக்கியபடி. 

பிரிண்டட் சர்க்யூட் போர்டை கண்டுபிடித்தவர்

எலெக்ட்ரானிக் உலகில் உள்ள பொருள்களுக்கு மிகவும் முக்கியமானது பிரிண்டட் சர்க்யூட் போர்டு ஆகும். ஒவ்வொரு எலெக்டாரானிக் பொருள்களின் உட்புறமும் பச்சை நிறத்தில் இருக்குமே அதுதான். இதை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த பவுல் எய்ஸ்லெர். 1936 ஆம் ஆண்டு ரேடியோ என்ற வானொலி பெட்டியை இயங்கச் செய்வதற்காக இந்த பிசிபி எனப்படும் பிரிண்டட் சர்க்யூட் போர்டை கண்டுபிடித்தார்.

புதிய வசதி

ஆண்ட்ராய்ட், ஐபோன்களில் வாட்ஸ் அப் உபயோகப்படுத்துபவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை அவர்களின் நண்பர்கள் தெரிந்து கொள்ளும் புதிய வசதி, நண்பர்கள் தங்கள் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களை மாற்றும் போதும், வாட்ஸ் அப் கால் பேசிகொண்டிருக்கும் போதும் Low பேட்டரி என இருந்தால் அதனை நண்பர்களுக்கு Notification-களில் தெரியபடுத்தும் அப்டேட்டும் விரைவில் வரவுள்ளது.

நானோ சார்ஜ்ர்

ஸ்மார்ட்போனில் சார்ஜ் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக ஒருசில வினாடிகளில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் வந்துவிட்டது. 'பிளக்சிபிள் சூப்பர் கெபாசிட்டர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப த்தைப் பயன்படுத்தி ஒருசில வினாடிகளில்  அதை சார்ஜ் செய்து விடலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்