முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

5000, 1000 ரூபாய் நோட்டுகள்

பிரதமர் மோடி அறிவித்த 500, 1000 ரூபாய் தாள்கள் முடக்கப்பட்ட அறிவிப்பிற்கு பிறகு இதை அறிந்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். 2,000 ரூபாய்க்கே வியக்கும் நபர்களுக்கு இந்தியா 5,000 , 10,000 தாள்களையும் வெளியிட்டது பற்றி தெரியுமா? 1954 - 1978 ஆண்டுகளுக்கு மத்தியில் இந்திய அரசு 5,000 மற்றும் 10,000 ரூபாய் தாள்களை வெளியிட்டது. பிறகு இது நிறுத்தப்பட்டது.

கேரட்டின் உண்மையான நிறம் என்ன தெரியுமா?

இன்றைக்கு அநேகமாக நமது தினசரி உணவில் இடம் பெறும் காய்கறி வகைகளில் கேரட் முக்கிய இடம் வகிக்கிறது. ஆரஞ்சு நிறத்தில் பச்சையாக தின்பதற்கேற்ற சுவையுடன் இன்றைக்கு கேரட் பயிரிடப்பட்டு கிடைக்கிறது. ஆனால் அதன் அசலான நிறம் என்ன தெரியுமா... 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் கேரட்டின் நிறம் ஊதா தான். கலப்பினங்கள் வாயிலாக மஞ்சள் மற்றும் வெள்ளி நிற கேரட்டுகள் உருவாகின. ஆரஞ்சு நிற கேரட்டுகளை நெதர்லாந்து (டச்சு) விவசாயிகள் பயிரிட்டு வந்துள்ளனர். மத்திய கால கட்டத்தில் ஊதா நிற கேரட்டை கலப்பினத்தின் மூலமாக இன்றைய சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றியவர்கள் அவர்கள் தான். இவை வளர்வதற்கு எளிதாக இருப்பதாக நம்பப்படுவதால் தொடர்ந்து இந்த நிறத்திலேயே பயிரிடப்பட்டு வருகின்றன.

சுவிஸ் நாட்டில் விலங்கை வளர்ப்பது சட்டவிரோதம் ?

சுவிஸ் நாட்டில் கினியா பிக் விலங்கை தனியாக வீட்டில் வைத்து செல்லப்பிராணியாக வளர்ப்பது சட்டவிரோதமாகும் ஏனெனில் அவை கூட்டமாக வாழும் விலங்குகள் இனத்தை சேர்ந்தவையாகும் எனவே கினியா பிக் விலங்கை ஒற்றையாக தனியாக வீட்டில் வைத்து வளர்க்க அந்த நாடு தடை விதித்துள்ளது ஆகவே அவற்றை கூட்டமாக வளர்க்கலாமே ஒளிய ஒற்றையாக தனித்து வைத்து வளர்க்கக்கூடாது என்று அந்த நாடு அறிவித்துள்ளது.

ஹைபர்சோனிக் விமானம்

அதிவேகமாக செல்லக்கூடிய பயணிகள் விமானத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.  இதற்கு "ஹைபர்சோனிக் விமானம்" என பெயரிட்டுள்ளனர். இதன் வெளிப்பாகம் செராமிக், கடினமான ரசாயன கலவைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. உலகத்தின் அதிவேகமான விமானமாக கருதப்படும் மிக்-25-ன் அதிகப்படியான வேகம் 3 ஆயிரத்து 200. இந்த வேகத்தை காட்டிலும், இருமடங்கு வேகத்தில் செல்லும் அளவிற்கு இந்த புதிய ரக பயணிகள் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  3 ஆயிரம் டிகிரி வரை இந்த விமானம் தட்பவெட்பத்தை தாங்கும். இந்த விமானத்தின் மூலமாக லண்டனிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு 2 மணி நேரத்திற்குள் செல்ல முடியுமம்.

குறையாத மோகம்

உலகில் ‘செல்பி’ எடுக்கும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆபத்தான இடங்களில் ‘செல்பி’ எடுக்கும் பழக்கத்தினால், இந்தியாவில் 76 பேர் மரணமடைந்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த கார்நிகி மெலன் பல்கலைக்கழக ஆய்வு குழு தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பலர் இளம் வயதினர்.

ஞாபக சக்தி அதிகரிக்க உடனடி வல்லாரை சட்னி

வல்லாரை கீரை நரம்புகளை வலுவாக்கி ஞாபக சக்தியைப் பெருக்கும். இதனை பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் கணைச்சூடு, மாந்தம் ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்கும்.தேவையானவை: வல்லாரைக்கீரை - அரை கட்டு, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, சுத்தம் செய்த இஞ்சி - சிறிய துண்டு, தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 5, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி வல்லாரைக்கீரை, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். ஆறியபின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும். சுவையான வல்லாரை சட்னி தயார்!

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்