முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சயின்ஸ் பிக்சன் பாணியில் 2 நகரங்களை இணைக்கும் ரியல் டைம் வீடியோ போர்ட்டல்

Image Unavailable

சயின்ஸ் பிக்சன் எனப்படும் அறிவியல் புனைகதைகள் அல்லது அறிவியல் புனைவு படங்கள் என்பவை அறிவியலின் மாயாஜாலத்தை காட்டுவது போல சித்தரிக்கும். ஓரிடத்தில் நடப்பதை நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தெரிந்து கொள்வது போன்ற விதவிதமான டிவைஸ்களை காண்பிப்பார்கள்.

இது போன்ற கருவிகள் ரியல் வாழ்க்கையில் இருந்தால் எப்படி இருக்கும் என்பது பொது மக்களுக்கு ஒரு கனவாகவே இருந்து வருகிறது. தற்போது அதை நனவாக்கும் வகையில், இதற்கு ஓர் உதாரணமாக போலந்து லிதுவேனியா நாடுகளுக்கு இடையே மக்கள் சம காலத்தில் தொடர்பு கொள்ளும் வகையில் மிகவும் பிரம்மாண்டமான ஒரு ரியல் டைம் வீடியோ போர்ட்டல் நிறுவப்பட்டுள்ளது. லிதுவேனியாவில் உள்ள விலினியஸ் மற்றும் போலந்து நாட்டில் உள்ள லுப்ளின் நகர மக்கள் ரியல் டைம்மில் நேரடியாக சந்தித்துக் கொள்ள வசதி செய்யும் வகையில் இந்த மிகப் பெரிய வீடியோ போர்ட்டல் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து ஒருவர் அதன் மூலம் மற்ற நகரத்திலிருக்கும் நபரை ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ள முடியும். ஏறக்குறைய சயின்ஸ் பிக்சன், மாயாஜால படங்களில் வருவதைப் போல மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த அமைப்பு நிறுவப்பட்டு உள்ளது. Benediktas Gylys Foundation என்ற அறக்கட்டளையின் உதவியுடன் இந்த போர்ட்டல் நிறுவப்பட்டுள்ளதாக அதன் தலைவர் Benediktas Gylys தெரிவித்தார்.  மேலும் இந்த போர்ட்டல் மூலம் மக்களிடையே ஒற்றுமை, நல்லுறவு போன்றவை வளர்ந்து கடந்த கால கசப்புகள் மறைய உதவும் என்றார்.

அதே போல பெருந்தொற்று காலத்தில் நம்மிடம் அறுந்து போன உறவுகளின் பாலங்களை மீண்டும் இணைக்க இந்த போர்ட்டல் உதவுவதுடன் சர்வதேச அளவிலான நாடுகளுடன் ஒத்துழைப்பு, நல்லுறவு, அண்டை நாடுகளுடன் நட்புறவு போன்றவை மேம்படும் என போலந்து அமைச்சர்Krzysztof Stanowski தெரிவித்தார்.

ஹாரி பாட்டர் பாணியிலான இந்த அமைப்பானது  தலா சுமார் 11 டன் எடை கொண்டதாகும். இதன் பராமரிப்பு பகுதியளவில் லிதுவேனியன் மற்றும் போலந்து உள்ளாட்சிகளின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் Reykjavik மற்றும் London போன்ற நகரங்களையும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்