மிகவும் உயரமான இடங்களில் வளரும் அரிய வகை மலரை கண்டறிந்துள்ளனர். சீனாவின் யுன்னான் பிரதேசத்தில் உள்ள துணை ஆல்பைன் மலைப்பகுதியில் சுமார் 3590 மீட்டர் உயரத்தில் இந்த செடி வளர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. Entosthodon elimbatus என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த செடி நான்கு முதல் எட்டி மிமீ உயரம் வரை வளரக் கூடியது. மேலும் பாறைகளின் பிளவுகளில் உள்ள மண்ணில்தான் இது வளருமாம். இந்த விசித்திரமான தாவரம் குறித்த ஆய்வு கட்டுரை அறிவியல் இதழ்களிலும் கடந்த 2020இல் வெளியிடப்பட்டன.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இன்றைக்கு நவீன நாகரிக உலகில் பேஷன் மால்களை கடக்காமல் நம்மால் ஒரு நாளை கூட தாண்ட முடியாது... முதன் முதலில் ஷாப்பிங் சென்டர்கள் எங்கு கட்டப்பட்டன தெரியுமா...ரோமில்தான். அங்குள்ள குயிரினல் ஹில் பகுதியில் தான் டாமஸ்கஸ் கட்டிட கலைஞர் அப்போலோ டோரஸ் என்பவரால் முதன் முதலில் இரண்டாம் நூற்றாண்டில் 5 அடுக்கு ஷாப்பிங் மால் கட்டப்பட்டது. 1900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப் பெரிய சந்தை வணிக வளாகம் இதுவாகும். தற்போது இந்த கட்டிடம் ஒரு அருங்காட்சியகமாக பராமரிக்கப்படுகிறது.
கணேச முத்திரை உடலில் உள்ள 6 ஆதார சக்கரங்களில், நான்காவது சக்கரமான அனாகத்தை தூண்டவல்லது. மேலும் இதயத்தைப் பலப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, நம்பிக்கை தரும். மூச்சை சீராக்கி, ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்படி செய்து, ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தும். தினமும் காலை, மாலை 15 நிமிடம் செய்தால் மிகுந்த பயன்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிகளுக்கு இன்ஜெஸ்டிபுள் சென்சார் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘டிஜிட்டல் மாத்திரைகள்’ வழங்கப்படவுள்ளன. இந்த மாத்திரை பயணிகளின் வயிற்றில் உள்ள அமிலத்தன்மை, பயணிகளின் தூக்கம் முறை, உடலின் வெப்பநிலை மற்றும் இதய துடிப்பு போன்ற தகவல்களை வழங்குகிறது. இதன்மூலம் பயணிகளின் உடல்நிலை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளமுடிகிறது.
நாம் சத்துமிக்க உணவுப்பொருட்களை அன்றாடம் சேர்த்துகொள்ள வேண்டும். அதிலும் 5 உணவுப்பொருட்கள் மிகவும் அவசியம். அவற்றில் மஞ்சள் மிகவும் முக்கியம். இது நம் உடலுக்குச் சிறந்த மருந்து. மூட்டு வாதம், பெருங்குடல் புண், செரிமானக் கோளாற்றை சரி செய்யும். அடுத்து லவங்கப்பட்டை. இதை நீரிழிவு நோயாளிகள் உட்கொண்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறையும். பூண்டு, இதய நோய் வராமல் தடுக்கும், ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. பூண்டுக்கு புற்றுநோய்ச் செல்களை அழிக்கும் திறன் உள்ளது. இஞ்சி, மலச்சிக்கல், கர்ப்ப கால குமட்டல் போன்றவற்றுக்கு இஞ்சி சிறந்த மருந்தாகும். செரிமானத்தைத் தூண்டக் கூடியதாக உள்ளது. வெந்தயம், நெஞ்செரிச்சல் அறிகுறிகளைச் சீராக்கும் வெந்தயம், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் குறைக்க உதவுகிறது. இதய நோய்களை உண்டாக்கும் கொழுப்பு அமிலங்களைக் குறைக்கவும் உதவுகிறது.
எவ்வளவு விலை உயர்ந்த காலணியாக இருந்தாலும், அல்லது ஷூவாக இருந்த போதிலும் அதிகபட்சமாக சில ஆயிரங்கள் இருக்கக் கூடும். ஆனால் பல லட்சத்துக்கு காலணிகள் விற்றது என்றால் அதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா...நைக் நிறுவனம் தயாரித்துள்ள அந்த ஷூவானது 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் மராத்தான் போட்டியில் பங்கேற்றது என்ற பெருமையை பெற்றதாகும். இதையடுத்து இந்த ஒரு ஜோடி காலணிகள் இந்திய மதிப்பில் ரூ.37.75 லட்சம் தொகைக்கு விற்பனையாகி உலக பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


