Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பெண்களை விட ஆண்கள் நிறக்குருடர்கள்

இந்த உலகை வண்ண மயமாகவும், அதன் 8 பரிமாணங்களுடனும் காணும் காட்சிதான் உள்ளத்துக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. ஆனால் அறிவியல் உள்ளத்தை பார்க்காது. உண்மையை மட்டும்தான். அப்படி பார்த்த போது ஒரு ஆச்சரியப்படும் செய்தி தெரியவந்தது. அது என்னவென்றால் பெண்களை காட்டிலும் ஆண்கள் சற்றே நிறக்குருடர்கள் என்பதுதான் அது. அதாவது பெண்களை காட்டிலும் நிறங்களை உணர்ந்து கொள்வதில் ஆண்கள் சற்று குறைச்சல்தான். இதற்கு அவர்களது மரபணுவில் காணப்படும் எக்ஸ் குரோமோசோம்தான் காரணம் எனச் சொல்லப்படுகிறது, பெண்களுக்கு 2 எக்ஸ் குரோமோசோம்கள் இருப்பதால் ஒன்றின் குறைபாட்டை மற்றது சரி செய்து விடுமாம். ஆனால் பாவம் ஆண்களுக்கு இருக்கும் ஒரு எக்ஸ் குரோமோசோமும் மக்கர் பண்ணினால், உலகம் கருப்பு  வெள்ளையாகத்தான் தெரியுமாம். என்ன கொடுமை சார் இது..

உடற்பயிற்சி

நாம் எந்த உடற்பயிற்சி செய்தாலும் உடலும், மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பது முக்கியம். உடற்பயிற்சி என்பது உடலை கஷ்டப்படுத்துவது அல்ல. உடலை வருத்திக்கொண்டு பயிற்சி செய்யும்போது, உடல் சோர்வடைவதால் உற்சாகமும் விரைவில் குறைந்துபோய் உடற்பயிற்சியையே கைவிட நேரிடும்.  எனவே ஆர்வத்தைத் தூண்டும் பயிற்சிகளை முதலில் செய்யவும்.

ஏலம் போனது

2-ம் உலகப்போரின் போது எத்தனையோ உயிர்களை கொல்ல ஆணையிட்ட சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி 1945-ம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஒரு பாதுகாப்பு கிடங்கு அறையில் கண்டு பிடிக்கப்பட்டது. இது தற்போது ரூ.1 கோடியே 68 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.

கவலை வேண்டாம்

வங்கியில் பணம் இருந்தாலும் கையில் பணம் இல்லாத கஷ்டத்தைப் போக்க உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை டோர் டெலிவரி செய்யும் புதிய திட்டத்தை ஸ்நாப் டீல் அறிவித்துள்ளது. இணைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான ஸ்நாப்டீல் நிறுவனம், ஒரு ரூபாய் கட்டணத்தில் 2,000 ரூபாய் பணத்தினை டோர் டெலிவரி மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கேஸ்@ஹோம் என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் 2,000 ரூபாயை ஆர்டர் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. டோர் டெலிவரி முறையில் உங்கள் வீட்டுக்கு வரும் டெலிவரி செய்பவரிடம் உள்ள பிஓஎஸ் இயந்திரத்தில் ஏடிஎம் கார்டினை ஸ்வைப் செய்து நீங்கள் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று ஸ்நாப்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக குர்காவுன் மற்றும் பெங்களூரு நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், மற்ற இந்திய நகரங்களுக்கும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

உலகில் அமைதியான இடம் எது தெரியுமா?

உலகிலேயே மிகவும் அமைதியான இடம் எங்குள்ளது என்ற தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அது இயற்கையான இடமோ, நகரோ அல்ல. மாறாக அது ஒர் அலுவலகம். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ரெட்மாண்ட் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மைக்ரோஷாப்ட் தலைமையகத்தில் உள்ள பரிசோதனை கூடம்தான் அந்த இடம். இந்த இடத்தில் உள்ள சத்தத்தின் அளவு வெறும் 20 டெசிபலுக்கும் கீழே உள்ள இடம். இதன் மூலம் முந்தைய சாதனைகளை இந்த இடம் முறியடித்துள்ளது

‘செல்பி’ மோகம்

‘செல்பி’ மோகத்தால் ஏற்படும் உயிர் இழப்புகள் குறித்த ஆய்வில், உலகிலேயே இந்தியாவில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் 127 பேர் ‘செல்பி’ மோகத்தால் உயிரிழந்ததாகவும், இதில், 76 உயிரிழப்புகள் இந்தியாவில் நடந்தவை என்றும் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago