முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எச்சரிக்கை எச்சரிக்கை

அமெரிக்காவில் தயாராகியுள்ள ஐபோன் வடிவிலான ஸ்மார்ட்போன் வடிவ துப்பாக்கியில் 9 மி.மீ. அளவு கொண்ட குண்டுகளைப் பயன்படுத்த முடியும். இணையதளம் ஒன்றில் விற்பனைக்கு வர உள்ள இந்த நவீன துப்பாக்கியை ஆன்லைனில் 12,000-த்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது ஆச்சரியமான தகவல்.

பெரிய மூளை

ஆர்க்டிக் பகுதியில், கரிம மாசுபாடுகள், சுகாதார பிரச்சினைகளால், வனவிலங்குகளில் பெரிய மூளை கொண்ட, போலார் கரடிகளுக்கு ஹார்மோன் பிரச்னை, மூளை சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறதாம்.

ஆயுளை கூட்ட

நாம் தினமும் விரும்பிச் செய்யும் உடற்பயிற்சியை செய்வதற்கு முன்பும், செய்த பின்னும் ஸ்டிரெச்சிங் பயிற்சிசெய்வது மிகவும் முக்கியமானது. இதை தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் செய்வதால், உடல் ரப்பர் போல வளைந்து கொடுத்து புத்துணர்ச்சி அடையச் செய்து, நம் ஆயுளையும் 10 ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு கூட்டுகிறதாம்.

சுற்றுலாவுக்கு ஏற்ற இடம்

உலகின் சிறந்த சுற்றுலா தலங்களில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் டாப்-10 நகரங்களில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகளவில் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்தேர்வான 43 சுற்றுலா தலங்களில் 10-வது இடத்தையும் ஆசியாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் 3-வது இடத்தையும் ஜோத்பூர் நகரம் பிடித்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரம் அழகிய அரண்மனைகள், கோட்டைகள், பிரமாண்ட மாளிகைகள் போன்றவற்றிற்கு சொந்தமானது. இதனால் இந்தியாவின் சிறந்த சுற்றுலா மையமாக ஜோத்பூர் விளங்குகின்றது.

ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்?

சிலருக்கு காபி இல்லை என்றால் அன்றைய தினம் அத்தனை சீக்கிரம் விடியாது. வேறு சிலருக்கோ வேலையும் ஓடாது, மூளையும் இயங்காது. ஆகவே காபி குடித்து நாளை உற்சாகமாக வைத்துக் கொள்பவர்கள் உலகம் முழுவதும் ஏராளமானோர் நிரம்பி வழிகின்றனர். அது, சரி, காபி குடித்தால் உடலுக்கு நல்லதா கெட்டதா, இதயத்தை பலப்படுத்துமா, பலவீனப்படுத்துமா இப்படி ஆயிரம் கேள்விகள் நம்மில் பலருக்கும் எழுவது சகஜம். அத்தகைய காபி குறித்த பல்வேறு உடல்நலம் சார்ந்த கருத்துகள் நிலவி வந்த நிலையில் ஒருவர் ஒருநளைக்கு 25 கப் காபி குடித்தாலும் ஒன்றுமே ஆகாது என்கிற புதிய ஆய்வறிக்கை காபி பிரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.  காபியில் அதிகளவு காஃபின் இருப்பதால் இதய நோய் உண்டாகும் என்ற கருத்து நிலவியது. திடீரென்ற மாரடைப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், உலகளவில் கோடிக்கணக்கானோர் தினமும் காபி அருந்தி வருகின்றனர்.  இந்நிலையில், 8,000 பேரை தேர்வு செய்து லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன்படி, தினசரி ஒரு கப், மூன்று கப், பல கப் என்று காபி அருந்துபவர்களை தரம் பிடித்து ஆய்வு மேற்கொண்டதில் யாருக்கும் காபியால் எந்த பாதிப்பும் உடலில் ஏற்படவில்லை.  இதனால், நாள் ஒன்றுக்கு 25 கப் வரை காபி அருந்தினால் கூட அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று இந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. இந்த செய்தியால் காபி எனும் தேசிய பானம் காப்பாற்றப்பட்டுள்ளதாக குதூகலிக்கின்றனர் காபி பிரியர்கள்!

சோகத்தை வெளிப்படுத்த

ஒரு நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால், தீர்ப்புக்கு பயன்படுத்திய பேனாவை உடைத்து விடுவர். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது கடைபிடிக்கப்பட்டு வந்த முறைதான் இது. இதற்கு காரணம், உயிரை குடித்த நிப்பை வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்பதற்காகவும், சோகத்தை வெளிப்படுத்தவும் இதை செய்து வந்துள்ளனர். ஆனால், நமது இந்திய சட்டப் புத்தகத்தில் எந்த இடத்திலும் மரண தண்டனை அளித்த பிறகு பேனா நிப்பை உடைக்க வேண்டும் என்ற குறிப்பு இல்லை. ஆங்கில யர்கள் ஆட்சிக் காலத்தில்தான் இந்த முறை பின்பற்றப்பட்ட து. அதற்காக நாமும் பின்பற்ற வேண்டுமா என்ன?.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago