பூமிக்கு வெளியே உள்ள குப்பைகளை அகற்ற மிகப்பெரிய மீன்வலையை அனுப்பியுள்ளது, ஜப்பான். சர்வதேச விண்வெளி மையத்திற்கு அந்த வலை ராக்கெட் மூலம் ஏவப்பட்டுள்ளது. இந்த மீன்வலை ஸ்டீல் மற்றும் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியில் இருந்து வெளிவரும் மின்சாரத்தின் மூலம் பூமியைச் சுற்றி வரும் குப்பைகளின் இயக்கத்தை மெதுவாக்கி, அவற்றை கைப்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
நல்ல அதிவேக இணைய வசதி அன்லிமிட்டெட்டாக கணக்கின்றி இருக்கும் போது நல்ல இணையத்தளங்களை நகல் எடுத்து வைத்துக் கொண்டால் இணையம் இல்லாத நேரங்களிலோ குறைந்த வேகத்தில் இருக்கும்போதோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படிச் செய்வதற்கு உதவும் ஒரு மென்பொருள் தான் 'எச்டிடிராக் வெப்சைட் காப்பியர். இந்த மென்பொருள், கட்டற்ற, இலவச மென்பொருள் என்பது கூடுதல் சிறப்பு. இதை https://www.httrack.com/ தளத்திற்குச் சென்று பதிவிறக்கிக் கொள்ளலாம். விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா, 7, 8, லினக்ஸ் டெபியன், உபுண்டு, ஜென்டூ, ஃபெடோரா, ஆண்டிராய்டு ஆகிய இயங்குதளங்களில் எச்டிடிராக்கை நிறுவிக்கொள்ளலாம். முக்கியமான இணையத்தளங்களை செல்போனிலேயே நகல் எடுத்து வைத்துக் கொள்ளலாம். மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருள் எச்டிடிராக்.
உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், காலை தூங்கி எழுந்தவுடன் முதல் ஐந்து நிமிடங்களில் ஸ்மார்ட் போனை தேடி எடுத்து விடுவதாக 61 சதவீதத்தினரும், முதல் அரை மணி நேரத்தில் ஸ்மார்ட்போனை எடுத்துவிடுவதாக 88 சதவீதத்தினரும், 96 சதவீதத்துக்கும் அதிகமானோர் முதல் ஒரு மணி நேரத்துக்குள் மொபைலை எடுத்துவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இதேபோல், 74 சதவீதம் பேர், இரவு தூங்கச் செல்வதற்கு 15 நிமிடங்கள் முன்பு வரை ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. 53,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாசாவின் பெர்மி காமா கதிர் ஸ்பேஸ் டெலஸ்கோப் நடத்திய ஆய்வில் நட்சத்திரம் ஒன்று காமா கதிர்களை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த காமா கதிர்களுக்கு LMC P3 எனப் பெயரிட்டுள்ளனர். கதிர்களை வெளியிடும் நட்சத்திரம் பூமியிலிருந்து 163000 ஒளியாண்டு தூரத்தில் காணப்படுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
எதிர்காலத்தை கலக்க புதிய டிஜிட்டல் ஆடைகள் தயாராகி வருகின்றன. இன்றைய புதிய நூற்றாண்டின் யூத்களின் மனநிலைக்கு ஏற்ப எதிர்காலத்தில் மிகப் பெரிய பேஷன் சந்தைக்கான கதவுகள் திறக்கப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் ஆடைகள் என்றால்... வாருங்கள் பார்க்கலாம்..டிஜிட்டல் ஆடைகள் துணி அல்லது உறுதியான எதையும் கொண்டு செய்யப்படவில்லை. கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்கள் மற்றும் 3டி மென்பொருளைப் பயன்படுத்தி ஜவுளிகளை விட பிக்சல்களில் இருந்து ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே நிஜ வாழ்க்கையில் நீங்கள் டிஜிட்டல் ஆடைகளை அணிய மாட்டீர்கள். அதற்கு பதிலாக, நீங்கள் டிஜிட்டல் ஆடைகளை ஆன்லைனில் உலாவலாம் மற்றும் நீங்கள் விரும்பும் ஒன்றை ஆர்டர் செய்யலாம்.நீங்கள் இதை வாங்க முடிவு செய்து விட்டால், அதை நேரில் பார்ப்பதற்கு பதிலாக டிஜிட்டல் வடிவில்தான் பார்க்க முடியும். இதை நீங்கள் நேரடியாக தொடவோ அணியவோ முடியாது. உங்கள் புகைப்படத்தில் தான் அணிய முடியும். இதற்காக பிரத்யேக டிஜிட்டல் ஆடை வடிவமைப்பாளர்கள் உள்ளனர். அவர்களிடம் ஆர்டர் செய்து டிஜிட்டல் முறையில் அவற்றை அணிந்து கொள்ளலாம்.இதில் குறிப்பாக தற்போது ஃபேஷனாக பரவி வருவது என்னவென்றால் வழக்கமான மேல் சட்டை கால் சட்டை என்பதாகஅல்லாமல் பாரம்பரிய உடைகள், வித்தியாசமான உடைகள் என விதவிதமாக கலக்கலாம். இவற்றிற்கும் குறிப்பிடத்தக்க அளவில் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இன்றைய நவீன யுகத்தில் தங்களை புதிய அவதார்களாக காட்டிக் கொள்ள விரும்பும் யூத்களுக்கும், நவீன டிஜிட்டல் பேஷன் விரும்பிகளுக்கும் இது மிகப் பெரிய சந்தையாக விரிவடைந்து வருகிறது. தொட்டுணரும் தன்மையிலிருந்து விலகி ஒரு புதிய உலகுக்கான கதவை இது திறந்து விட்டுள்ளது. தற்போது இதை அணியும் இளைஞர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இதை அடிப்படையாக வைத்து தற்போது பேஸ்புக்கும் மெட்டாவெர்சன் என்ற புதிய அவதாரத்தை தொடங்கியுள்ளதாகவும் பேஷன் நிபுணர்கள் கருதுகின்றனர். எதிர்காலத்தில் புதிய பேஷன் சந்தைக்கான புதிய கதவு திறந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
விஞ்ஞானத்தில் எப்போதும் புதுமைகள் சாத்தியம் தான். அண்மையில் இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள உயிரினம் ஆக்சிஸன் அதாவது பிராண வாயு இல்லாமலேயே உயிர் வாழக்கூடியது. இது அறிவியலில் அதிசயம். சால்மன் மீன்களின் தசையில் வாழக்கூடிய உயிரினம் இது. 10 உயிரணுக்களுக்கும் குறைவாகக் கொண்ட இந்த ஒட்டுண்ணிக்கு ஹென்னிகுயா சால்மினிகோலா என்று பெயரிடப்பட்டுள்ளது.ஜெல்லிமீன் மற்றும் பவளப்பாறை இனத்தை சேர்ந்த உயிரினமாக இந்த ஒட்டுண்ணி கருதப்படுகிறது. இவை பிராணவாயுவை உள்வாங்குவதும் இல்லை, மூச்சுவிடுவதும் இல்லை. பரிணாம வளர்ச்சியில் புதிய திசையை காட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் வியக்கின்றனர். அவர்களோடு சேர்ந்து நாமும் வியப்போம்.. என்ன ஓகேவா..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


