முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஒன்றுக்கும் மேற்பட்ட நாசிகளை கொண்ட விலங்கு எது தெரியுமா?

பொதுவாக மனிதன் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கும் ஒன்று அல்லது இரண்டு மூக்கு மட்டுமே காணப்படும். ஆனால் ஒரு விலங்குக்கு ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்றல்ல, நான்கு மூக்குகளை கொண்டுள்ளது. அவை ஸ்லக்குகள் என்ற ஒரு வகை நத்தைகள் ஆகும். இவற்றின் மூக்கு மனிதனின் நாசிகளைப் போல வாசனைகளை நுகரும் வேலையை மட்டும் செய்வதில்லை. மாறாக நிலத்தில் கலந்துள்ள ரசாயனம், சத்தங்கள், வெளிச்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான செயல்பாடுகளையும் அவை மூக்கினாலேயே மேற்கொள்கின்றன... என்றால் ஆச்சரியம் தானே.

இயந்திர மனித போலீஸ்

சீனாவில் ஹெனான் உள்ள லேங்க்லோ கிழக்கு ரயில்வே நிலையத்தில் ரோந்து பணிக்கு  இயந்திர மனிதன் பயன்படுத்தப்படுகிறது. முதல் நாளே அங்கு மூண்ட சிறு தீயைக் கண்டறிந்தது அந்த இயந்திர மனிதன். 1.6 மீட்டர் உயரமான இந்த இயந்திர மனித போலீஸ், குற்றவாளிகளையும், சந்தேகப்படும்படி யாரேனும் இருந்தால் அவர்களையும் முகத்தை வைத்து அடையாளம் காணும். தற்போது செங்ச்சாவ் ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுவரும் அந்த எந்திரன் போலீஸ், அங்கு பணிபுரியும் ஊழியர்களையும் அவர்களது அடையாள அட்டை கொண்டு சரியாக அடையாளம் காண்கிறதாம்.

அருகில் இருக்கு

இன்றைய சூழலில், பணம் எடுக்க ஏ.டி.எம் மையங்களை கண்டறிய, இணையத்தின் மிகப்பெரிய தேடுபொறியான கூகுள், தனது ஹோம் பேஜில், சர்ச் பார் எனும் தேடுதலுக்கான வார்த்தைகளை உள்ளீடு செய்யும் இடத்துக்குக் கீழ் கொண்டு வரப்ப ட்டுள்ள ஃபைன்ட் ஆன் ஏ.டி.எம் நியர் யு (Find an ATM near you) வசதி மூலம் அருகிலுள்ள ஏ.டி.எம் மையங்களை தெரிந்து கொள்ளலாம்.  கூகுள் மேப் உதவியுடன் அளிக்கப்படும் இந்த வசதி மூலம் அருகிலுள்ள வங்கிக் கிளைகளை உடனடியாக அறிந்து கொள்ளலாம். இந்த வசதி கூகுள் மேப்ஸ் தளத்தில் ஏற்கனவே இருந்தாலும், முக்கியத்துவம் கருதி கூகுள் ஹோம் பேஜுல் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் கயிறு இழுக்கும் போட்டி

இன்றைக்கு எந்த ஒரு ஆண்டுவிழா, பள்ளி, கல்லூரி விழா என்றால் தவறாமல் இடம் பிடிக்கும் விளையாட்டுகளில் ஒன்றாக கயிறு இழுக்கும் போட்டி இடம் பெறும். இருந்தாலும் இதையெல்லாம் யாரும் விளையாட்டாக கூட மதிப்பதில்லை. ஆனால் ஒரு கால கட்டத்தில் இந்த போட்டிகள் ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருந்தன என்றால் ஆச்சரியம் தானே.. 1900 தொடங்கி 1920 வரையிலான காலகட்டத்தில் இந்த விளையாட்டும் ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு கயிறு இழுக்கும் போட்டி உள்பட 33 விளையாட்டுகளை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கப்பட்டன.

சீனாவில் அதிசயம்

சீனாவில் தற்போது வசந்த காலம் தொடங்கியுள்ள நிலையில் அங்கு 16 இளம் ஜோடிகள் வானத்தையும், பூமியையும் சாட்சியாக வைத்து கொண்டு பறக்கும் பலூனில் திருமணம் செய்து கொண்டனர். வடக்கு சீனாவில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், தெற்கு சீனாவில் இதமான சீதோஷ நிலை நிலவி வருவது குறிப்பித்தக்கது.

கோப்பையின் மதிப்பு

கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய கோப்பை ரூ.245 கோடிக்கு (37.7 மில்லியன் டாலர்) ஏலம் போனது. இது சாங் மன்னர் ஆட்சி காலத்தில் அதாவது கி.பி.960-1127-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த கோப்பை ஹாங்காங் கில் சோத்பீ மையத்தில் ஏலம் விடப்பட்டது. இதற்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டு மிங் மன்னர் ஆட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட சீன கோப்பை அதிகபட்சமாக ரூ.233 கோடிக்கு ஏலம் போனது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago