முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்த கிரிக்கெட் மைதானம் எது தெரியுமா

 உலகிலேயே மிக ன இடத்தில் அமந்துள்ள கிரிக்கெட் மைதானம் எங்கு அமைந்துள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். ஆம், நீங்கள் யூகித்ததைப் போலவே அது இந்தியாவில்தான் அமைந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள சையில் என்ற இடத்தில் உள்ள ராணுவ பள்ளியில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானம்தான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள மைதானமாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 2444 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. Chail Cricket Ground என்று அழைக்கப்படும் இந்த மைதானம் கடந்த 1893 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் என்ன ஒரு சந்தேகம் என்றால் சிக்ஸர் அடித்தால் பந்தை திரும்ப எடுக்க முடியுமா..

ஒலிம்பிக்கில் கயிறு இழுக்கும் போட்டி

இன்றைக்கு எந்த ஒரு ஆண்டுவிழா, பள்ளி, கல்லூரி விழா என்றால் தவறாமல் இடம் பிடிக்கும் விளையாட்டுகளில் ஒன்றாக கயிறு இழுக்கும் போட்டி இடம் பெறும். இருந்தாலும் இதையெல்லாம் யாரும் விளையாட்டாக கூட மதிப்பதில்லை. ஆனால் ஒரு கால கட்டத்தில் இந்த போட்டிகள் ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருந்தன என்றால் ஆச்சரியம் தானே.. 1900 தொடங்கி 1920 வரையிலான காலகட்டத்தில் இந்த விளையாட்டும் ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு கயிறு இழுக்கும் போட்டி உள்பட 33 விளையாட்டுகளை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கப்பட்டன.

கூடும் ஆயுட்காலம்

பெண்களின் சராசரி ஆயுட்காலம் தொடர்பாக 35க்கும் மேற்பட்ட வளர்ந்த நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவின்படி, நவீன மருத்துவ உலகில் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. 2030-களில் தென்கொரியா, பிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின் நாட்டு பெண்களின் சராசரி ஆயுட்காலம் 88 வயதை எட்டக்கூடுமாம்.

இதற்கும் மருத்துவமனை

அல்ஜீரியாவில், ஃபேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் புளு கம்யூனிட்டி என்ற பெயரில் தீவிரவாத சிந்தனைகளுக்குள் மக்களை இழுக்க  தீவிரவாத இயக்கங்கள் முயற்சி செய்து வருவதாகக் எழுந்த புகாரை அடுத்து இது தொடங்கப்பட்டுள்ளது.

சமையலுக்கு மட்டுமல்ல...

இனு, உப்பை ஒதுக்காமல் அழகிற்காக பயன்படுத்தலாம். மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து பத்து நிமிடம் வாய்க்குள் வைத்து பின் கொப்பளிப்பதால், கன்னத்தின் அழகு அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் உப்பை சேர்த்து உடலை நன்கு தேய்த்து கழுவ சருமம் அழகாகவும், பொலிவோடும் காணப்படும்.

அதிசய தம்பதிகள்

கொலம்பியா, மெடிலின் என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதிகளான மரியா கார்சியா மற்றும் மிகுல் ரெஸ்ட்ரீபோ இருவரும் கடந்த 22 வருடங்களுக்கு முன்னர், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தனர். பிளாட்பாரங்களில் தங்கியிருக்கும் போது ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து வந்ததால், சேர்ந்து வாழ முடிவெடுத்து,  பயனில்லாத பாதாளச் சாக்கடையில் தங்களுக்கான இல்லத்தை உருவாக்கி குடியேறினர். பாதாளச் சாக்கடையில் 22 வருடங்களாக வசிக்கும் இவர்கள், தங்களுக்கு துணையாக ஒரு நாயையும் வளர்த்து வருகிறார்கள். இந்த இல்லத்தில் மின்சார வசதியைப் பெற்று, டி.வி உள்ளிட்ட சாதனங்களையும் பயன்படுத்தி வருவதுதான் ஆச்சரியம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்