முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பழங்கால கல் கோளங்கள் அல்லது கல்பந்துகள் எங்குள்ளன தெரியுமா?

பார்ப்பதற்கு பூங்காவில் அழகிய வடிவமைப்புக்காக செய்து வைக்கப்பட்டுள்ளதை போல காட்சியளிக்கும் கல் கோளங்கள் கோஸ்டா ரிகாவில் கண்டு பிடிக்கப்பட்டன. இவற்றை உள்ளூர் வாசிகள் கல் பந்துகள் என்றழைக்கின்றனர். 1 செமீ தொடங்கி 2 மீ விட்டம் கொண்ட சுமார் 15 டன் வரையிலான எடை கொண்ட ஏராளமான கல் கோளங்கள் கண்டறியப்பட்டன. இவை சுமார் கிபி 600 முதல் 1500 வரையிலான கால கட்டத்தைச் சேர்ந்தவையாக கூறப்படுகிறது. டிக்யூஸ் கலாச்சாரத்தை சேர்ந்த இந்த கற்கோளங்கள் எதற்காக செய்யப்பட்டன என்பது விளங்காத மர்மமாகவே வரலாற்றில் இது வரை இருந்து வருகிறது என்றால் ஆச்சரியம் தானே..

’ப்ளூ வேல்’ கேம்

உலக அளவில் பிரபலமாக வரும் ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல், பங்கேற்பாளருக்கு பல்வேறு சவால்களை அளிக்கும். நாளொரு சவால் வீதம் 50 நாட்களுக்கு கொடுக்கப்படும். ஆரம்பத்தில் சவால்கள் எளிதாகவே இருக்கும். ஆனால், போகப்போக சவால்கள் கடினமாக்கப்படும். இறுதியில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற சவால் விடுக்கப்படும். இந்த விளையாட்டுக்கு அடிமையாகும் இளைஞர்களை நிஜ உலகத்துடனான தொடர்பை இழக்க செய்து, விர்ச்சுவல் எனப்படும் மாய உலகத்துக்குள் அழைத்துச் சென்று தற்கொலை செய்யத் தூண்டுவதுதான் இதன்  நோக்கம். இந்த விளையாட்டை வடிவமைத்த ரஷ்யாவின் பிலிப் புடேய்கின் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Hiccups, விக்கல்

ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...  நின்று போகும் தீராத விக்கல்! ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு, சர்க்கரையை வாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!

மின் விளக்கை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் அல்ல

தாமஸ் ஆல்வா எடிசன் மிகப் பெரிய விஞ்ஞானி என்பது நமக்கு தெரியும். அவர் கண்டுபிடித்தவற்றின் பட்டியல் மிக நீளமானது. அதிகாரப்பூர்வமாக 1093 கண்டுபிடிப்புகளுக்கு அவர் காப்புரிமை பெற்றிருந்தார். அவற்றில் ஒன்று மின் விளக்கு. ஆனால் பெரும்பாலான வரலாற்றாய்வாளர்களின் கருத்துபடி அவர் பெரும்பாலான பிறரால் கண்டுபிடிக்கப்பட்டவற்றை தன்னுடையது என காப்புரிமை பெற்றதாக சொல்லப்படுகிறது. அதில் மின் விளக்கம் அடங்கும். ஏனெனில் அவர் மின் விளக்கை கண்டுபிடிப்பதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்து வானியல் மற்று ரசாயன விஞ்ஞானி வாரன் டி லா ரூ என்பவர் அதை கண்டுபிடித்து விட்டார் என்பதுதான் ருசிகரமான தகவலாகும்.

ராபர்ட் கிளைவ் திருமணம் எங்கு நடந்தது தெரியுமா?

மேஜர் ஜெனரல் ராபர்ட் கிளைவ், வங்காளத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிய ஒரு இங்கிலாந்து அதிகாரி ஆவர். இந்தியத் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்சும் படைத்தலைவர் இராபர்ட் கிளைவும் இணைந்துதான் பிரித்தானிய இந்தியாவை உருவாக்கிய முக்கிய நபர்களாகக் கருதப்படுகின்றனர். இந்த ராபர்ட் கிளைவ், சென்னையில்தான் திருமணம் செய்து கொண்டார். செயின் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சர்ச்சில் இருக்கும் திருமண ரிஜிஸ்டரில் ராபர்ட் கிளைவ் கையொப்பமிட்டிருக்கிறார்.  அதை ஒரு நினைவுச் சின்னமாக வைத்திருக்கிறார்கள் என்றால் ஆச்சரியம் தானே.

அதிசய சிறுமி

சீனாவின் சுன்யி நகரில் வசிக்கிறாள், தந்தையால் கைவிடப்பட்ட வாங் அண்ணா என்ற 5 வயது சிறுமி. தனது பாட்டி, கொள்ளு பாட்டியுடன் வசித்து வரும் இவள்,  அவர்களுக்கு சமைப்பது, ஊட்டிவிடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது போன்ற வேலைகளை செய்வது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்