முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பால் உற்பத்தியை அதிகரிக்க செய்ய பசுக்களுக்கு சிறப்பு விஆர் கண்ணாடிகள்

தொழில் நுட்ப வளர்ச்சி இன்றைய கால கட்டத்தில் கன்னாபின்னாவென தறிகெட்டு போய் கொண்டிருக்கிறது. எதெதற்கு கருவிகள் வரும் அது எப்படி வரும் என்று கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சகலும் சாதனம் மயம் என்றாகி விட்டது. அண்மையில் பசு மாடுகள் அதிக பாலை தர வேண்டும் என்பதற்காக வெர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. துருக்கி நாட்டைச் சேர்ந்த İzzet Koçak என்ற விவசாயிதான் இந்த புதுமையான கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர். எங்களிடம் உள்ள பசுக்களில் 2 பசுக்களை தேர்வு செய்து அவற்றுக்கு விஆர் கண்ணாடிகளை அணிவித்தோம். அதில் பசுமையான சூழலை படம் பிடித்து காட்டினோம். தற்போது அவை கூடுதலாக 27 லிட்டர் பால் கறக்கின்றன என்கிறார். என்ன கொடும சார் இது என்றுதான் நமக்கு சொல்லத் தோன்றுகிறது. எல்லாம் கலி காலம் சாரி..டிஜிட்டல் காலம்.

வாலுடன் பிறந்த அதிசய குழந்தை

நம்மில் ஒரு சிலர் கை மற்றும் கால்களில் 6 விரல்களுடன் பிறப்பது வழக்கம். ஒரு சில குழந்தைகள் இரட்டையர்களாக ஒட்டியும் ஒட்டாமலும் பிறப்பதும் உண்டு. ஆனால் மனித தோன்றிய பிறகு பரிணாம வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டு வாலில்லா விலங்கினமாகவே பிறக்கிறோம். ஆனால் தற்போது மருத்துவ அதிசயமாக பிரேசில் நாட்டில் உள்ள தம்பதிக்கு குழந்தை ஒன்று வாலுடன் பிறந்துள்ளது. சுமார் 12 செமீ நீளம் கொண்ட அந்த வாலின் இறுதியில் சிறிய அளவிலான தசைப் பந்து போன்ற அமைப்பும் இருந்துள்ளது. குழந்தையின்பிரசவம் இயல்பாக இருந்த போதிலும் இந்த வால் உருவானது என்பது மருத்துவ துறைக்கு மிகவும் வியப்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. முழுமையான பரிசோதனைக்கு பிறகு அந்த வால் உடலின் நரம்பு மண்டலம் மற்றும் இதர அவயங்களுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவ விஞ்ஞான கட்டுரை ஒன்றும்  Journal of Pediatric Surgery Case Reports இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மருத்துவ உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகை ஆளும்

செல்போன் போன்ற கையடக்கக் கருவிகளில், தொடுதிரையைத் தாங்கி வெளியான முதல் செல்போன் என்ற பெருமையுடன் ஸ்டீவ் ஜாப்ஸால் ஆப்பிள் ஐபோன் 2007ம் ஆண்டு அறிமுகமானது. ஒரே ஒரு ஸ்மார்ட்போன் மூலம் உலகையே மாற்ற முடியும் என்று பத்தே ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் நிரூபித்துள்ளது

குடிநீருக்காக ....

அண்டார்டிகாவில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு குடிநீர் எடுக்கும் திட்டத்தை 2019-ம் ஆண்டிற்குள் தொடங்க, அமீரக நாடுகள் திட்டமிட்டுள்ளன. குடிநீர் பிரச்சனையை தீர்க்க அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறைகளை வெட்டி எடுத்து, கடல்மார்க்கமாக 9,200 கி.மீ கொண்டு வந்து, பின்னர் அதை தண்ணீராக்கி விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு சுமார் 500 மில்லியன் டாலர்கள் செலவாகுமாம்.

இடது கை பழக்கம் உள்ளவர்கள் மரணம் ஏற்பட என்ன காரணம் தெரியுமா?

நம்மில் பலரையும் நாம் பார்த்திருக்க கூடும். அவர்கள் நம்மை போல அல்லாமல் இடது கை பழக்கம் உடையவர்களாக இருப்பர். இடது கையால் எழுதுவது, இடது கையால் வேலைகளை செய்வது, சாப்பிடுவது. அவ்வளவு ஏன் நமது கிரிக்கெட் வீரரான சிகர் தவான் போன்றவர்கள் விளையாட்டில் கூட பட்டையை கிளப்புவதை பார்த்திருக்கலாம்... ஆனால் ஒன்று தெரியுமா இந்த உலகம் வலது கை பழக்கமுடையவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இடது கை பழக்கமுடையவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வலது கை காரர்கள் உருவாக்கிய கருவிகளால் சுமார் 2500 பேர் வரை இடது கை பழக்கமுடையவர்கள் உயிரிழக்கும் நிலை உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்ன ஒரு உலகம் பாருங்கள்.

காற்றாழையில் இருந்து தோலாடை

ஆண்டு தோறும் தோல் மற்றும் இறைச்சிக்காக ஏராளமான வன விலங்குகள் கொல்லப்ட்டு வருகின்றன. இவற்றை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் புதிய சாதனையாக  இரண்டு இளைஞர்கள்  கற்றாழையிலிருந்து ‘தோல்’ ஆடை உருவாக்கி சாதனை படைத்து உள்ளனர்.விலங்குகளின் தோல்களில் இருந்து தயாரிப்படும் பல்வேறு வகையான  ஆடம்பர பொருட்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக, சட்டவிரோதமாக விலங்குகள் வேட்டையாடப்படும் கொடுமையும் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் , அட்ரியானோ டி மார்டி என்ற நிறுவனம்,  டெசர்டோ எனப்படும் கற்றாழை இலைகளைப் பயன்படுத்தி தோலைப் போன்றே  துணியை உருவாக்க ஒரு புதிய நுட்பத்தை வகுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான  அட்ரியன் லோபஸ் வெலார்டே மற்றும் மார்ட்டே செசரெஸ் ஆகிய இளைஞர்கள் இதை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்