முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

டி.வி.யால் ஆபத்து

25 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கும் பெண்கள் டி.வி. பார்க்கும் ஒவ்வொரு மணிநேரமும் அவர்களின் வாழ்நாளில் 22 நிமிடங்களை இழக்கிறார்கள் என ஆய்வு மூலம் தெரிகிறது. டி.வி பார்ப்பதால் பெண்களுக்கு உடல் உழைப்பு இல்லாமல் போவதே இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதற்கு காரணம் . எனவே உடல் உழைப்பை அதிகப்படுத்தும் வேலையை செய்தால் ஆரோக்கியம் கிடைக்கும்.

பிறந்த குழந்தைகள் கண்ணீர் விடுவதில்லை

பிறந்த குழந்தைள் வீறிட்டு அழுவதை நாம் கேட்டிருப்போம். பசியின் போதும், தாயின் துணை தேடியும் பிறந்த குழந்தைகள் அழுவது வழக்கம். ஆனால் நமக்கு இதுவரை தெரியாத ஒன்று என்ன தெரியுமா.. அவ்வாறு அழுதாலும் அவர்களுக்கு கண்ணீர் வருவதில்லை என்பதுதான். ஏன் தெரியுமா.. பிறந்த குழந்தையின் கண்களில் கண்ணீர் சுரப்பிகள் இருக்காது. கண்ணீர் சுரப்பிகள் 4 முதல் 12 வாரங்களுக்கு பிறகே வளரத் தொடங்கும். பிறகென்ன அதற்கு பிறகு கண்ணீர் மழைதான்.

மர்ம முக்கோணம்

மியாமி, பெர்முடா தீவு மற்றும் புவேர்ட்டோ ரிக்கோவுக்கு இடையே அமைந்திருக்கும் மிகப்பெரிய கடல் பரப்பளவு தான் பெர்முடா முக்கோணம். இங்கு கடலில் கடக்கும் கப்பல்கள், வானத்தில் கடக்கும் விமானங்கள் உள்வாங்கி மறைந்தன. அதற்கான காரணம் பெர்முடா முக்கோணத்தின் மேல் இருக்கும் மேகங்கள் தானாம். கில்லர் க்ளவுட்ஸ் என்று அழைக்கப்படும், பெர்முடா முக்கோணத்தின் மேல் இருக்கும் இந்த மேகங்கள் அறுங்கோண வடிவில் (Hexagonal) இருப்பதால், அங்கு காற்று மணிக்கு 170 மைல் வேகத்தில் பயணிக்கிறது. இதனாலேயே, பெர்முடா முக்கோணம் பகுதியில் கப்பல்கள் மற்றும் விமானங்கள் உள்வாங்கின என்றும் ஆராய்ச்சியார்கள் கூறுகின்றனர்.

களிமண் அணை

கரிகாலன் காவிரியை வென்றவன், இமயத்தில் கொடி நட்டுவந்தவன் என்னும் பெருமைக்குரியவன். சோழ வம்சத்தின் ஆட்சிப் பகுதிகளை விரிவுபடுத்தியவன் இப்படி பல்வேறு சிறப்புக்களை கொண்டவன் கரிகாலன். அடிக்கடி வெள்ளத்தால் மக்கள் அவதிப்படுவதால் அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தனர் சோழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. பாறைகளுக்கு மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டயும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும். பல வல்லுநர்கள் வந்து சோதித்து பார்த்தும் இன்னும் இதற்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

வந்து விட்டது தலைமுடிக்கும் மவுசு கேசத்தில் தயார் செய்த ஆடைகள் டிரெண்டிங்

விலங்குகளின் தோல்களையும், ரோமங்களையும் கொண்டு ஆடைகள் தயார் செய்தது பழைய காலம். பின்னர் பருத்தியையும் மரத்திலான நார்களையும் பயன்படுத்தி ஆடைகள் செய்வது தற்காலம். ஆனால் மனித கேசத்தில் நவீன ஆடைகளை தயாரிப்பதுதான் தற்போது நியு டிரெண்டிங்.  ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் Zsofia Kollar என்பவர்தான் இந்த புதிய ஐடியாவுக்கு சொந்தக்காரி. தற்போது ஜவுளி உற்பத்தியின் வயிற்றை கலக்கியுள்ள இந்த புதிய ஆடை வடிவமைப்பு பிரபலமாகத் தொடங்கியுள்ளது. மேலும் பசுமை ஆடை, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத ஆடை என்ற பெயரில் பல்வேறு ரகங்கள் சந்தையில் குவிந்து வரும் வேளையில் உண்மையிலேயே இது ஒரு மாற்றுதான் என்கிறார் இவர். முடி, அதன் அளவு, நச்சுத்தன்மையற்ற தன்மை, அதிக இழுவிசை வலிமை, வெப்ப இன்சுலேட்டர், நெகிழ்வுத்தன்மை, இலகுரக மற்றும் எண்ணெயை உறிஞ்சும் திறன் ஆகியவற்றின் காரணமாக, ஜவுளி உற்பத்தி முறைக்கு ஒரு சிறந்த சேர்க்கையாக அமைகிறது என்று ஜவுளித்துறையின் தலையில் தூக்கி கல்லை போடுகிறார். ஜவுளி உற்பத்தியால் ஏற்படும் ரசாயன மாசுபாட்டிலிருந்து விலகி இது முற்றிலும் இயற்கையானதாக இருக்கும் என்கிறார். தற்போது இவரது நவீன ஆடை ரகம் ஜெட் வேகத்தில் டிரெண்டாகி வருகிறது.

பூமிக்கு ஆபத்து

‘பிளாணட் எக்ஸ்- தி 2017 அரைவல்’ என்ற பெயரில் டேவிட் மேட் எனும் எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகத்தில் சூரியனைப் போன்றதொரு கோள் பூமியை நோக்கி பயணித்து வருகிறது. நிபிரு என்று அழைக்கப்படும் அந்த நெருப்புக் கோள் பூமியின் தென்துருவம் மீது வரும் அக்டோபரில் மோதும். இதனால் பூமி முழுமையாக அழியும் என்று எழுதியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்