முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சமையல் எரிவாயு வாசனை இல்லாது

நமது வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு அடுப்பில் அதை பற்ற வைக்கும் போதோ, அல்லது சிலிண்டரில் ஏதேனும் கசிவு ஏற்படும் போதோ உடனே நமக்கும் வாசனை ஏற்பட்டு உஷாராகி விடுகிறோம். அப்படியானால் நாம் பயன்படுத்தும் எரிவாயுவுக்கு வாசனை உள்ளதா என்றால்... கிடையாது. உண்மையில் அதன் இயல்பான நிலையில் புராபேன், பியூட்டேன் ஆகியவற்றின் கலவையாகும். இவற்றிற்கு அடிப்படையில் வாசனை கிடையாது. சமையல் பணிகளின் போது விபத்து ஏற்படாமல் தடுக்கவும், கசிவை புரிந்து கொள்ளவும் அதில் எதில் மெர்காப்டன் என்ற தனிமம் கலக்கப்படுகிறது. இதுதான் சமையல் எரிவாயுக்கு வாசனையை கொடுக்கிறது. இதை கலந்த பிறகே சிலிண்டரில் நிரப்பபட்டு நமது வீடுகளுக்கு வருகிறது சமையல் எரிவாயு.

தேனின் மகிமை

உடல் மெலிந்தவர்கள் தேனில் பேரீச்சம்பழத்தை ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் சதை பிடிக்கும். அல்சர் நோய் குணமாக தினமும் சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டி தேனைச் சாப்பிட்டு வர வேண்டும். அரை அவுன்ஸ் தேனுடன் அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்த சுத்தியும், ரத்த விருத்தியும் ஏற்படும்.

தொழில்நுட்ப வளர்ச்சி

கூகுள், கடந்த 8 வருடங்களாக முயற்சி செய்து அக்டோபர் மாதம் சோதனை முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. முதலில் எக்ஸ் லேப் என பெயரிடப்பட்ட கூகுளின் இந்த தானியங்கி கார்கள் தற்போது வேமோ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த தானியங்கி கார் மூலம் களைப்பு, போதை, கவனச் சிறதல்கள் போன்றவற்றால் உருவாகும் விபத்துகளை தவிர்க்க முடியும்.கண் தெரியாதவர்கள் கூட தனியாக வேமோவில் எளிதாக பயணிக்கமுடியும் என்கிறது கூகுள். ஜிபிஎஸ் செட்டிங்க்ஸ் மூலம் இந்த வகை கார்கள் சாலைகளில் உள்ள போக்குவரத்து சூழல், சிக்னல் போன்றவற்றை உணர்ந்து செயல்படுகின்றன.

புதிய முயற்சி

முன்பு சல்பர் டை ஆக்சைடு மூலம் பூமியின் வெப்ப நிலையைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முறையில் ஓசோன் படலத்திற்கு பாதிப்பு ஏற்படுவது தெரிய வந்த நிலையில், கால்சைட் தூசுகளை வளிமண்டலத்தில் தூவுவதன் மூலம் பூமியின் வெப்பநிலையை குறைக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

கதவுகளே இல்லாத கிராமம்

கிராமம் என்றால் வீடுகள் இருக்கும். வீடுகள் என்றால் வாசல் கதவுகள் இருக்கும்தானே.. ஆனால் ஒரு வித்தியாசமான கிராமத்தில் வீடுகளுக்கு வாசல் கதவுகளே கிடையாது. அந்த கிராமம் எங்குள்ளது தெரியுமா...இந்தியாவில்தான். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷானி ஷிங்னாப்பூர்தான்  அது. இது சனீஸ்வர பகவானின் திருத்தலமாகவும் வணங்கப்படுகிறது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலை கொண்டுள்ள இந்த கிராமத்துக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கதவு இல்லாத போதும் இந்த கிராம மக்கள் இரவில் நன்றாகவே உறங்குகின்றனர். ஏன் தெரியுமா... சனி பகவான் காவல் காப்பதாக ஒரு ஐதீகம். என்னா ஒரு ஆச்சரியம் பாருங்கள்..

சூப்பர் சோனிக்

‘பேபி பூம்‘ என பெயரிடப்பட்டுள்ள, மணிக்கு 2,335 கி.மீட்டர் வேகத்தில் சீறி பாய்ந்து செல்லும், அதிவேக சூப்பர் சோனிக் பயணிகள் விமானத்தை  அமெரிக்காவின் விர்ஜின் தொழில் அதிபர் தயாரிக்கிறார். இந்த விமானம் 60 ஆயிரம் அடி உயரம் பறக்க கூடியது. இதில் லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு 3 மணி 15 நிமிடத்தில் பயணம் செய்ய முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago