முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

டிஜிட்டல் மாத்திரை

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிகளுக்கு இன்ஜெஸ்டிபுள் சென்சார் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘டிஜிட்டல் மாத்திரைகள்’ வழங்கப்படவுள்ளன. இந்த மாத்திரை பயணிகளின் வயிற்றில் உள்ள அமிலத்தன்மை, பயணிகளின் தூக்கம் முறை, உடலின் வெப்பநிலை மற்றும் இதய துடிப்பு போன்ற தகவல்களை வழங்குகிறது. இதன்மூலம் பயணிகளின் உடல்நிலை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளமுடிகிறது.

பாஸ்போர்ட்டில் முதன்முறையாக புகைப்படம் ஒட்டும் முறை எப்போது வந்தது தெரியுமா?

பாஸ்போர்ட்டுக்கு நீண்ட வரலாறு உண்டு. பைபிள் காலத்திலேயே ‘பாஸ்போர்ட்’ போன்ற ஆவணம் பயன்பாட்டில் இருந்தது உங்களுக்குத் தெரியுமா? பாரசீக அரசரான ஒன்றாம் அர்டாக்செர்செக்ஸ், நெஹேமியா என்பவர் யூதேயா வழியாக பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்கு கடிதம் ஒன்றை வழங்கினார். அதுதான் முதல் பாஸ்போர்ட் எனக் கருதப்படுகிறது. ஸ்காண்டிநேவிய பாஸ்போர்ட் மீது புற ஊதாக் கதிர் வெளிச்சத்தைப் பாய்ச்சினால், வானவில் போல வானில் வெவ்வேறு வண்ணங்களைக் காட்டும் ‘நாதர்ன் லைட்ஸ்’ போன்ற ஒளி ஜாலத்தைப் பார்க்க முடியும். பாஸ்போர்ட்டில், அதற்கு உரியவரின் படம் அவசியம். முதல் உலகப்போர் துவங்கிய பிறகுதான் பாஸ்போர்ட்டில் புகைப்படம் இருக்க வேண்டியது கட்டாயமானது. ஜெர்மனிக்காக உளவு வேலை பார்த்த ஒருவர் ஒரு போலி அமெரிக்க பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இங்கிலாந்துக்குள் நுழைந்தார். இதையடுத்து பாஸ்போர்ட்டில் புகைப்படம் நிச்சயம் தேவை என்ற நிலை கொண்டுவரப்பட்டது. இது 1915 இல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. பாஸ்போர்ட் அறி முகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் ஒருவர் தமக்குப் பிடித்த எந்த ஒரு புகைப் படத்தையும் பாஸ் போர்ட்டுக்குக் கொடுக்கலாம். குடும்பத்தோடு இருக்கும் குழு புகைப்படம் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மொபைல் சார்ஜ் தீர்ந்து விட்டதா?

மொபைல் போன் வைத்திருப்பவர்களின் கவலை பெரும்பாலும் சட்டென்று கரைந்துவிடக் கூடிய பேட்டரி சார்ஜ்தான்.  தற்போது வெளியூர் பயணங்களின் போது பலரும் பவர் பேங்க் வைத்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் மொபைலை சார்ஜ் செய்வதாக இருந்தாலும், பவர் பேங்கை சார்ஜ் செய்வதாக இருந்தாலும் அதற்கான மின் இணைப்பை தேட வேண்டியது அவசியமாகும். மின் இணைப்பு கிடைக்காத வெட்ட வெளியில் இருக்க நேர்ந்தால், மொபைல் பேட்டரி சார்ஜ் டவுண் ஆகி விட்டால்.. மிகவும் கஷ்டம்தான். இதனால் நமது மனமும் டவுனாகி விடும். இனி அந்த கஷ்டம் வேண்டாம். மொபலை சார்ஜ் செய்ய தற்போது சோலார் மொபைல் சார்ஜர் வந்து விட்டது. இதற்கு சிறிய அளவு வெளிச்சம் போதும். அதை அப்படியே நமது மொபைலில் இணைத்து விட்டால்... நாள் முழுவதும் பேட்டரி டவுன் ஆகாமல் ஜாலியாக அரட்டை கச்சேரியை தொடரலாம்.. இதன் விலையும் சுமார் ரூ.300 லிருந்து தொடங்கி பல்வேறு ரகங்களில் ஆன் லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இனி வாங்கி உங்களது நண்பிகள், நண்பர்களை அசத்துங்கள்..

ஹைபர்சோனிக் விமானம்

அதிவேகமாக செல்லக்கூடிய பயணிகள் விமானத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.  இதற்கு "ஹைபர்சோனிக் விமானம்" என பெயரிட்டுள்ளனர். இதன் வெளிப்பாகம் செராமிக், கடினமான ரசாயன கலவைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. உலகத்தின் அதிவேகமான விமானமாக கருதப்படும் மிக்-25-ன் அதிகப்படியான வேகம் 3 ஆயிரத்து 200. இந்த வேகத்தை காட்டிலும், இருமடங்கு வேகத்தில் செல்லும் அளவிற்கு இந்த புதிய ரக பயணிகள் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  3 ஆயிரம் டிகிரி வரை இந்த விமானம் தட்பவெட்பத்தை தாங்கும். இந்த விமானத்தின் மூலமாக லண்டனிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு 2 மணி நேரத்திற்குள் செல்ல முடியுமம்.

புதிய மருந்து கண்டுபிடிப்பு

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சிலர் வாரம் ஒருமுறை அல்லது தினமும் இன்சுலின் மருந்து ஊசி போட்டுக் கொள்கின்றனர். இதில் இருந்து தப்பிக்க புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  புதிய மருந்து மூலம் மாதம் ஒரு தடவை மட்டும் ஊசி போட்டால் போதும். இதை 2-ம் நிலை (டைப் 2) நீரிழிவு நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியும். இந்த மருந்து ‘ஜெல்’ போன்ற தோற்றம் உடையது. இதை ஊசி மூலம் செலுத்தியவுடன் உடலில் தேங்கிவிடும். பின்னர் உடல் வெப்பத்தின் மூலம் சிறிது சிறிதாக உருகி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். இந்த மருந்து விலங்குகளிடம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இந்த மரம் ரொம்ப காஸ்டலி

தங்கம், பிளாட்டினம், வைரம் போன்ற உலகின் அரிய வகை தனிமங்கள் தான் உலகின் விலைமதிப்பு மிக்கது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அதை இன்றோடு மறந்துவிடுங்கள். இந்த நகைகளை காட்டிலும் விலைமதிப்பற்ற மரம் ஒன்று இருக்கிறது. அந்த மரத்தின் பெயர் அகர் மரம். அதன் விலை கிலோ ரூ.75 லட்சம். அக்குலேரியா என்ற மரத்தின் ஒருவகைதான் இந்த அகர் மரம். இந்த மரத்துக்கு வேறுசில பெயர்களும் உண்டு. அவை கற்றாழை மரம் அல்லது கழுகு மரம். ஜப்பானில் கியாரா அல்லது கயனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியா, ஜப்பான், அரேபியா, சீனா, மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்றவற்றில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த மரமே உலகின் மிக அரிதான விலைமதிப்புமிக்க ஒரு மரமாகும்.இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பிசின் மூலம் ஒருவகை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் வாசனை திரவியங்களின் தயாரிப்பில் அத்தியாவசியமான பொருளாக உள்ளது. தற்போதைய நிலையில் இந்த எண்ணெய் ஒரு கிலோ 25 லட்ச ரூபாய் ஆகும். அப்படி என்றால் இந்த மரம் தானே உலகிலேயே மிகவும் காஸ்ட்லி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago