முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தெரியாம போச்சே

1998-ம் ஆண்டு முதல் ஆப்பிள் கருவிகளில் ‘ஐ’ முன்வைக்கப்பட்டுள்ளது.‘ஐ’ -ன் அர்த்தம் என்ன என்றால் பெரும்பாலானோருக்கு தெரியாது. அதன் அர்த்தம் இண்டர்நெட் என ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியுள்ளார். இதற்கு தனிப்பட்ட (individual), அறிவுறுத்து (instruct), தெரிவித்தல் (Inform) மற்றும் ஊக்குவித்தல் (inspire) போன்றவையும் அர்த்தமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய வசதி

முதன்முதலாக ப்ரீமியம் டெலிவிஷனில் கால் பதிக்கும் ஃபேஸ்புக், 24 சொந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது. அதிக நேரம் கொண்ட நிகழ்ச்சி மற்றும் குறைந்த நிமிடங்கள் கொண்ட நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்பட உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டவுடன், ஃபேஸ்புக் ஆப்-பின் வீடியோ டேப்பிலும் காணக்கிடைக்கும். ஃபேஸ்புக் டிவி, ஜூன் மாதம் முதல் செயல்படும்.

அதிசய உடல்

மனிதன் உயிர் வாழ உடலில், ஒரே ஒரு நுரையீரல், ஒரு சிறுநீரகம் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். மேலும் பெருங்குடல் நீக்கப்பட்டாலும், அந்தரங்க உறுப்புகள் இல்லாமலும் ஆண், பெண் உயிர் வாழ முடியும். உடலில் தைராய்டு சுரப்பி, மண்ணீரல் நீக்கப்பட்டாலும் ஆபத்து இல்லை.

அறிவுறுத்தும் ஆவல்

புளிப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகமாக இருந்தால், பித்தப்பை மற்றும் கல்லீரல் அளவுக்கு அதிகமாக வேலை செய்கிறது என்று அர்த்தம். இறைச்சிகளின் மீது நாட்டம் இருந்தால், உடலுக்கு புரோட்டீனை தேவை என்று அர்த்தம். சர்க்கரை  மீது ஆவல் அளவுக்கு அதிகமாக நாம் சர்க்கரை எடுத்துக்கொள்கிறோம் என்று அர்த்தம்.

கிழக்கையும் மேற்கையும் இணைத்த வர்த்தக நகரம்

மத்திய கிழக்கின் தொல்லியல் பெருமைகளில் பல்மைரா நகரம் தனித்துவமானதாக பார்க்கப்படுகிறது மத்திய கிழக்கில் உள்ள அதி முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் இடங்களில் பல்மைரா நகரமும் ஒன்று. பாலைவனச் சோலை என கருதப்படும் சிரியாவில் இந்த நகரம் அமைந்துள்ளது. பண்டைய காலங்களில் கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் வணிக வழி தொடர்புகளை இணைக்கும் மிகவும் முக்கியமான நகரமாக பல்மைரா விளங்கியது. இந்நகரில் உள்ள பல்வேறு இடங்களையும் ஐநா பாரம்பரிய பட்டியலில் இணைத்துள்ளது.

மழையின் பெயரில் கரன்சி வெளியிடும் நாடு எது தெரியுமா?

ஒவ்வொரு நாட்டு கரன்சிக்கும் அதாவது பணத்துக்கும் ஓர் பெயர் உண்டு. ஆனால் மழையின் பெயரையே கரன்சிக்கு சூட்டிய நாடு எது தெரியுமா... சகாரா பாலைவனத்தில் அமைந்துள்ள நாடான போஸ்துவானா தான் அது. அந்நாட்டு கரன்சியின் பெயர்  போஸ்துவானன் புலா. அவர்கள் மொழியில் புலா என்றால் மழை. அவர்களின் அடிப்படையான அனைத்து கரன்சிகளிலும் இந்த புலா அதாவது மழை என்ற பெயர் இடம் பெற்றிருக்கும் என்பது ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்