முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நாட்டுக்கோழி கோழி சூப்

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

நாட்டுக்கோழி கோழி சூப் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. நாட்டுக்கோழி  கறி - 1/4 கிலோ.
  2. சீரகத்தூள்  – 2  ஸ்பூன்.
  3. மிளகுத்தூள் – 1 ஸ்பூன்.
  4. மல்லி  தூள் 1 ஸ்பூன்.
  5. மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்.
  6. இஞ்சி - சிறிதளவு.
  7. பூண்டு  4 பல்.
  8. பச்சை மிளகாய் - 2.
  9. உப்பு - தேவையான அளவு.
  10. சின்ன வெங்காயம் – 6.
  11. பெரிய வெங்காயம் – 1.
  12. கொத்தமல்லி, புதினா - சிறிதளவு.
  13. சோம்பு -1 சிட்டிகை.
  14. கிராம்பு – 2.
  15. பட்டை – 1.
  16. ஏலக்காய்2.
  17. நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்.
  18. கான்பிளவர் மாவு 25 கிராம்.

 

Method: 

 

செய்முறை ;

  1. பூண்டு 4 பல் மற்றும் இஞ்சி சிறிதளவு இவை இரண்டையும் மிக்சியில் போட்டு நன்றாக  அரைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் 25 கிராம் கான்பிளவர் மாவு போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் குக்கரை வைத்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த நாட்டுக்கோழி கோழி கறி 1/4 கிலோ போடவும்.
  4. இதனுடன் மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, தேவையான அளவு உப்பு போட்டு குக்கரை முடி 4 விசில் வரும் வரை நன்கு வேக விடவும்
  5. குக்கர் ஆவி போனதும் இதில் சோம்பு 1 சிட்டிகை,கிராம்பு  2,பட்டை 1,ஏலக்காய்  2, போட்டு கலந்து விடவும்.
  6. சீரகத்தூள் 2  ஸ்பூன்,மிளகுத்தூள்  1 ஸ்பூன்,மல்லி  தூள் 1 ஸ்பூன், ஒரு நறுக்கி வைத்த தக்காளி, நறுக்கி வைத்த பச்சை மிளகாய் 2 போட்டு கலந்து விடவும்.
  7. நறுக்கி வைத்த கொத்தமல்லி, புதினா மற்றும்  நறுக்கி வைத்த 6 சின்ன வெங்காயத்தை போட்டு கலந்து விடவும்.
  8. மிக்சியில் அரைத்து வைத்த இஞ்சி ,பூண்டு விழுது 1 ஸ்பூன் சேர்த்து கலந்து விடவும்.
  9. கரைத்து வைத்துள்ள கான்பிளவர் மாவு ஒரு ஸ்பூன் போட்டு கலந்து விடவும்.
  10. ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி 5 நிமிடம் மூடி வேக வைக்கவும்.
  11. சிறிதளவு மல்லி தூவி இறக்கவும்.
  12. சுவையான நாட்டுக்கோழி கோழி சூப் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago